தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோடு துவையா


கோடு துவையா

276. குறிஞ்சி
'கோடு துவையா, கோள் வாய் நாயொடு
காடு தேர்ந்து அசைஇய வய மான் வேட்டு
வயவர் மகளிர்' என்றிஆயின்,
குறவர் மகளிரேம்; குன்று கெழு கொடிச்சியேம்;
5
சேணோன் இழைத்த நெடுங் காற் கழுதில்
கான மஞ்ஞை கட்சி சேக்கும்
கல் அகத்தது எம் ஊரே; செல்லாது
சேந்தனை, சென்மதி நீயே-பெரு மலை
வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு,
10
வேங்கை முன்றில் குரவையும் கண்டே.
பகற்குறி வந்து பெயரும் தலைமகனை உலகியல் சொல்லியது.-தொல் கபிலர்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:02:16(இந்திய நேரம்)