தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தம் நாட்டு விளைந்த


தம் நாட்டு விளைந்த

183. நெய்தல்
தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து,
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி,
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி,
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து,
5
உமணர் போகலும் இன்னாதாகும்-
மடவை மன்ற-கொண்க!-வயின்தோறு
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்
நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே;
இன மீன் ஆர்ந்த வெண் குருகு மிதித்த
10
வறு நீர் நெய்தல் போல,
வாழாள் ஆதல் சூழாதோயே.
வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி சொல்லியது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:05:46(இந்திய நேரம்)