தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நயனும் நண்பும்


நயனும் நண்பும்

160. குறிஞ்சி
நயனும், நண்பும், நாணு நன்கு உடைமையும்,
பயனும், பண்பும், பாடு அறிந்து ஒழுகலும்,
நும்மினும் அறிகுவென்மன்னே-கம்மென
எதிர்த்த தித்தி, ஏர் இள வன முலை
5
விதிர்த்து விட்டன்ன அந் நுண் சுணங்கின்,
ஐம் பால் வகுத்த கூந்தல், செம் பொறி
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி,
முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
10
அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே.
கழற்று எதிர்மறை.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:08:17(இந்திய நேரம்)