தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நெய்யும் குய்யும்


நெய்யும் குய்யும்

380. மருதம்
நெய்யும் குய்யும் ஆடி, மெய்யொடு
மாசு பட்டன்றே கலிங்கமும்; தோளும்,
திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்ற,
புதல்வற் புல்லிப் புனிறு நாறும்மே;
5
வால் இழை மகளிர் சேரித் தோன்றும்
தேரோற்கு ஒத்தனெம் அல்லேம்; அதனால்
பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ்
எழாஅல் வல்லை ஆயினும், தொழாஅல்;
கொண்டு செல்-பாண!-நின் தண் துறை ஊரனை,
10
பாடு மனைப் பாடல்; கூடாது நீடு நிலைப்
புரவியும் பூண் நிலை முனிகுவ;
விரகு இல மொழியல், யாம் வேட்டது இல் வழியே!
பாணற்குத் தோழி வாயில் மறுத்தது.-கூடலூர்ப் பல்கண்ணனார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:11:31(இந்திய நேரம்)