தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பரந்து படு கூர் எரி


பரந்து படு கூர் எரி

177. பாலை
பரந்து படு கூர் எரி கானம் நைப்ப,
மரம் தீயுற்ற மகிழ் தலைஅம் காட்டு
ஒதுக்கு அரும் வெஞ் சுரம் இறந்தனர் மற்றவர்;
குறிப்பின் கண்டிசின் யானே; நெறிப் பட,
5
வேலும் இலங்கு இலை துடைப்ப; பலகையும்
பீலி சூட்டி மணி அணிபவ்வே;
பண்டினும் நனி பல அளிப்ப; இனியே
வந்தன்று போலும்-தோழி!-நொந்து நொந்து,
எழுது எழில் உண்கண் பாவை
10
அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே.
செலவுக் குறிப்பு அறிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:12:56(இந்திய நேரம்)