தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மா என மதித்து


மா என மதித்து

342. நெய்தல்
'மா என மதித்து மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து வெண் தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு, என்றும்
5
அருளல் வேண்டும், அன்பு உடையோய்!' என,
கண் இனிதாகக் கோட்டியும் தேரலள்:
யானே-எல்வளை!-யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்,
10
'என் எனப் படுமோ?' என்றலும் உண்டே.
குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம்புக்க தன் சொல் கேளாது விடலின், இறப்ப ஆற்றான் ஆயினான் என உணர்ந்து, ஆற்றாளாய்த் தன்னுள்ளே சொல்லியது; தலைமக னுக்குக் குறை நேர்ந்த தோழி, தலைமகளை முகம் புக்கலளாய், ஆற்றாது தன்னுள்ளே ெ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:19:13(இந்திய நேரம்)