தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மாசு இல் மரத்த


மாசு இல் மரத்த

281. பாலை
மாசு இல் மரத்த பலி உண் காக்கை
வளி பொரு நெடுஞ் சினை தளியொடு தூங்கி,
வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும்
நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும்
5
அடங்காச் சொன்றி, அம் பல் யாணர்
விடக்குடைப் பெருஞ் சோறு, உள்ளுவன இருப்ப,
மழை அமைந்து உற்ற மால் இருள் நடு நாள்,
தாம் நம் உழையராகவும், நாம் நம்
பனிக் கடுமையின், நனி பெரிது அழுங்கி,
10
துஞ்சாம் ஆகலும் அறிவோர்
அன்பிலர்-தோழி!-நம் காதலோரே.
வன்பொறை எதிர் அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது; 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழி தலைமகட்கு உரைத்ததூஉம் ஆம்.- கழார்க் கீரன் எயிற்றியார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:19:25(இந்திய நேரம்)