தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்


கடம்பமரம் (கடம்பு)

34. குறிஞ்சி
கடவுட் கற்சுனை அடை இறந்து அவிழ்ந்த
பறியாக் குவளை மலரொடு காந்தள்
குருதி ஒண் பூ உரு கெழக் கட்டி,
பெரு வரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்
5
அருவி இன் இயத்து ஆடும் நாடன்
மார்பு தர வந்த படர் மலி அரு நோய்
நின் அணங்கு அன்மை அறிந்தும், அண்ணாந்து,
கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி,
வேலன் வேண்ட, வெறி மனை வந்தோய்!
10
கடவுள் ஆயினும் ஆக,
மடவை மன்ற, வாழிய முருகே!
தோழி தெய்வத்துக்கு உரைப்பாளாய் வெறி விலக்கியது.-பிரமசாரி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 07:22:44(இந்திய நேரம்)