தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

இருந்தையூர்க் கொற்றன் புலவன்


இருந்தையூர்க் கொற்றன் புலவன்

335. குறிஞ்சி
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இருங் கல் வியல் அறைச் செந் தினை பரப்பிச்
சுனை பாய் சோர்வு இடை நோக்கி, சினை இழிந்து,
பைங் கண் மந்தி பார்ப்பொடு கவரும்
வெற்பு அயல் நண்ணியதுவே-வார் கோல்
வல் விற் கானவர் தங்கைப்
பெருந் தோட் கொடிச்சி இருந்த ஊரே.
இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. - இருந்தையூர்க் கொற்றன் புலவன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:05:56(இந்திய நேரம்)