தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தண் துளிக்கு ஏற்ற


தண் துளிக்கு ஏற்ற

382. முல்லை
தண் துளிக்கு ஏற்ற பைங்
கொடி முல்லை
முகை தலைதிறந்த நாற்றம் புதல்மிசைப்
பூ அமல் தளவமொடு, தேம் கமழ்பு கஞல,
வம்புப் பெய்யுமால் மழையே; வம்பு அன்று,
கார் இது பருவம் ஆயின்,
வாராரோ, நம் காதலோரே?
பருவ வரவின்கண் வேறுபட்ட தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று; வம்பு' என்று வற்புறீஇயது. - குறுங்கீரன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:55:40(இந்திய நேரம்)