தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மலர் ஏர் உண்கண்


மலர் ஏர் உண்கண்

377. குறிஞ்சி
மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய,
வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன் தலையும்,
மாற்று ஆகின்றே-தோழி!-ஆற்றலையே-
அறிதற்கு அமையா நாடனொடு
செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே.
வரைவிடை, 'ஆற்றாள்' எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி அழிந்து கூறியது.- மோசி கொற்றன்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 09:07:31(இந்திய நேரம்)