தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


22
ஆசிரியர்கள் வரலாறு


துண்டென்பதும் அஃது இடப இலைச்சினை யென்பதும் அப்பூணில் பவளத்தாற் செய்த இடபவுருவும் பொன்னாற்செய்த மழு வாள்களினுருவு முளவென்பதும் தெரிகின்றன. இச்செய்தி வேறெங்கும் கண்டதில்லை. இதனானே இவரைச் சைவ சமயத்துக்கு ஓர் அரும் பொருளளித்தவ ரென்னலாம்.

2. உள்ளிவிழவு :

"கொங்கர், மணிஅரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி விழவி னன்ன’’ -அகம். 368 : 16 - 18.

இதனால், இவ்விழாவிலே கொங்கர், தம்மிடையிலே மணிகளைக் கட்டிக்கொண்டு வீதியிலே ஆடுவரென்ற செய்தி அறிவிக்கப்படுகிறது. இவ்விவரம் வேறெங்கும் காணப்படவில்லை.

3. பரசுராமன் வேள்வி செய்த இடம் செல்லூர் என்பது :

"கெடா அத் தீயின் உருகெழு செல்லூர்க் 
கடாஅ யானைக் குழுஉச்சமந் ததைய
மன்மருங் கறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன் றரிதினின் முடித்த வேள்விக்
கயிறரை யாத்த காண்டகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல யாவரும்
காண லாகா மாணெழி லாகம்’’ - அகம் 220 : 3 - 9

இப்பகுதியால் பரசுராமன் மன்னவரை அழித்து மிகமுயன்று அரிதாக வேள்வி செய்தானென்றும் அவ்வேள்வி செய்த இடம் செல்லூரென்றும் அவ்வேள்வியின் யூபத்தம்பத்தின் இடைப்பகுதி யாருக்குந் தெரியாதவாறு தருப்பைக்கயிற்றால் மறைத்துக் கட்டப்பட்டிருந்ததென்றும் தெரியவருகின்றன.

4. மதுரைவீதிகள் தூயனவாயிருந்தன வென்பது :

"கதிர்விரியா வைகலிற் கைவாரூஉக் கொண்ட
மதுரைப் பெருமுற்றம் போலநின் மெய்க்கட்
குதிரையோ வீறியது’’ -கலி. 96.

இவ்வடிகளால் மதுரையிற் பெரிய வீதிகளெல்லாம் விடியற்காலத்தே அலகால் சீத்துக் குப்பை வாரித் தூயனவாக்கப்பட்டு வந்தனவென்பது அறியப்படுகின்றது.

5. வியாழமும் வெள்ளியும் அரசியனூல் இயற்றின ரென்பது :

"நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவையெடுத்
தறவினை யின்புறூஉ மந்தண ரிருவருந்
திறம்வேறு செய்தியி னூனெறி’’ -கலி. 99.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:07:58(இந்திய நேரம்)