தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


5. நவ்வந்துவனார்.
31


நெஞ்சுவருந்தக் கொடுத்துண்ணா தொழுகின் அவன் கல்விக்குக் கேடுண்டாமென்றும் வலியுறுத்தியும் கூறுகின்றார். இவர் (கலி. 133 : 6 - 14) நீதிகளைச் சுருக்கித் தெளிவாகக் கூறுதலிலும் (கலி. 125 : 1 - 4; 142 : 6 - 8; 144 : 70 - 73.) இயற்கையை எடுத்துரைத்தலிலும், (கலி. 138 : 15 - 17. 21 - 23; 141 : 7 - 8; 146 : 49. 55.) சிறப்பாக உவமை கூறுதலிலும் வல்லவர்.

இவர் (கலி. 146 : 52 - 55) வானம்பாடி மழைத்துளிக்கு அலமந்து அதனைப் பெற்றபோது அல்லல் தீருமென்றும் (கலி. 143 : 10 - 13) வேடர் வஞ்சனையாக யாழை வாசித்து மான்களை மனமகிழும்படி செய்து பின்பு பறையறைந்து அவற்றினுயிர் நீங்கச் செய்வரென்றும் (கலி. 121 : 7 - 9) சுறாமருப்புப் பலகையைக் கோத்து ஒரு வகையாழ் செய்வதுண்டென்றும் கூறியிருக்கிறார்.

(கலி. 147 : 8 - 9.) மகளிருக்கு உயிரினும் நாண் சிறந்ததென்றும், (கலி. 142 - 147) அவர் மிக்க காமத்தால் வருந்துங்கால் அறிவழிந்து அந்நாண் முதலியவற்றையு மிறந்து பலபொருளையும் விளித்துக் கலங்கி மொழிவரென்றும், (கலி. 142 : 24) அவர் தம் கணவர் பிரிந்திருக்குங் கால் அவர் வருகையை அறிய விரும்பிக் கூடற்சுழியிழைப்பரென்றும், (கலி. 138 - 141) ஆடவர் மிக்க காமத்தால் மடலூர்தல் முதலியன செய்து தாம் விரும்பிய கன்னியரை அடைவரென்றும் இவர் உரைத்துள்ளார்.

கலி. (138 - 141.) இவர் மடலேறுதற் செய்தியை மிகப் புனைந் துரைத்திருத்தலும் (பரி. 11 : 1 - 15) வானநூற் செய்தியையும், (பரி. 6; 11; 20) நீர் விளையாட்டுச் செய்திகளையும் (கலி. 136) சூதாட்டச் செய்தியையும் ஒவ்வோரிடத்துக் கூறியிருத்தலு முதலியவை இவர் பலவற்றையும் சுவைபடப் பாடும் ஆற்றலுடையவ ரென்பதற்குச் சான்றாம்.

(கலி. 118 : 1 - 20; 119; 120 : 1 - 9; 121 : 1 - 5; 126 : 1 - 5; 129 : 1 - 7; 130 : 1 - 16; 134 : 1 - 10; 143 : 36 - 41; 148 : 1 - 19.) இவர் பாடியிருக்கும் மாலைக்கால வருணனை மிக்க நயமுடையது.

இவர் பாடல் இசைக்கு முரியனவான பரிபாடலின் கண்ணும் இந்நூலின் கண்ணும் பல காணப்படுதலானும் இவரை மதுரை மருதனிள


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:09:19(இந்திய நேரம்)