Primary tabs
இவர், (பரி. 8.) திருப்பரங்குன்றத்துக் கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் முருகப்பெருமானைத் தரிசிப்பதற்காக முப்பெருந்தேவரும் முப்பத்துமூவரும் எண்டிசை யிறைவரும் விண்டிகழ் முனிவரு முதலானவர்கள் மண்மிசை வந்தனரென்றும் மக்கள் அங்கு வந்து தாம்தாம் விரும்பும் வரங்களைப் பெறவேண்டி வழி படுவாரென்றும் அத்தெய்வ சம்பந்தமாக உறுஞ் சூளுறவுக்கு அஞ்சுவரென்றும் பலவகையாகப் பாராட்டிக் கூறுதலால் இவர் முருகக் கடவுளிடத்து மிக்க பத்திமை யுடையவரென்பது வெள்ளிடைமலையென விளங்கும்.
இவரே இந்நூற் கடவுள் வாழ்த்துச் செய்யுளையும் பாடி இந்நூலைத் தொகுத்தவரென்பது முதற் சம்புட முகவுரைக்கண் கூறப்பெற் றிருக்கிறது.
அம்முகவுரையிலுள்ள 1‘நாடும் பொருள்சான்ற’ 2‘பெருங்கடுங்கோன் பாலை’ என்னுமுதலையுடைய வெண்பாக்களானும் இந்நூலுரையில் நச்சினார்க்கினியர் இவ்வாசிரியரைக் குறிக்குமிடத்து நெய்தற்றிணையில் மாத்திரம் 3‘செய்யுள் செய்தார்’ என்றும் மற்றைத் திணைகளிலெல்லாம் 4கோத்தார் என்றும் விதந்தோதுதலானும் இவர் பாடியவை இவையென்பதும் தொகுத்தது இஃதென்பதும் வலியுறும். (தொல். அகத். சூ. 13. நச், உரையும் பார்க்க.)
இவர் பாடல்கள் இந்நூலில் (1, 118 - 150) முப்பத்து நான்கும் நற்றிணையில் (88) ஒன்றும் பரிபாடல் முதலிருபத்திரண்டனுள் (6, 8, 11, 20) நான்கும் அகத்தில் (43) ஒன்றுமாக நாற்பது பாடல்கள் காணப்படுகின்றன. இவையன்றித் திருவள்ளுவ மாலையிலுள்ள ‘சாற்றிய பல்கலையும்’ (18) என்னும் வெண்பாவும் இவரியற்றிய தென்பர்.
இவர் (கலி. 139 : 1 - 4; 140 : 17 - 18) சான்றோரியல்பையும், (கலி. 140 : 21 - 22) சான்றோரவையி னன்மையையும் புகழ்ந்து கூறுதலால் இவருக்கு அவர்பாலுள்ள நன்மதிப்புப் புலனாகின்றது. இவர், (கலி. 138 : 30 - 31) மக்கள் அருந்தவஞ் செய்தலால் சுவர்க்கமுறுவரென்று தவத்தைச் சிறப்பித்தும், (கலி. 149 : 1 - 7, 10 - 11) ஊழ்வினை ஊட்டாது விடாதென்பதனால் தீவினை செய்யலாகாதென்றும், (கலி. 149 : 4 - 5, ) ஒருவன் கற்பித்தவர்
1 பக்கம் 7, 2 பக்கம் 9, 3 பக்கம் 893, 4 பக்கம் 11, 12, 347, 575.