தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


நச்சினார்க்கினியர்.

இக் கலித்தொகைக்குப் பொருள் கண்டவர் நச்சினார்க்கினியரென்பவர். இவரது ஊர் பாண்டிநாட்டதாகிய மதுரை; இவர் அந்தணர் மரபில் பாரத்துவாசர் குடியில் தோன்றியவர். இவ்வுரை 1மிகச் சிறந்ததென்பர். இவர் தம் பரந்த அறிவாலும் ஒழியா முயற்சியாலும் இந்நூற்கன்றியும் பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி 2தொல்காப்பியமாகிய பல துறைப்பட்ட தமிழ்ச் செய்யுணூல்கள் முழுவதற்கும் 3உரைகண்டு தமிழ் மக்கட்குப் பேருதவி செய்தவர். தமிழ் விளங்குவதற்காக இவர் பல்லாண்டு நிலவுலகத்தில் வாழ வேண்டுமென்று உலகத்தால் வேண்டப்பெற்றவர். இவற்றால், இவர் வாணாளை வீணாளாக்காத பெரியாரென்று புகழத் தக்கவரே.

சிறந்த அறிவினரான பேராசிரியர், தம் கல்வியறிவை உலக மறிந்து மதிக்க நினைந்து பொருளெழுதி வந்த குறுந்தொகைக் கண் இருபது பாட்டிற்குப் பொருளெழுதாதொழிய இவர் அந்தப் பகுதிக் கெல்லாம் ஏற்பப் பொருளுரைத்திருத்தல், பிறவுரை யாசிரியர் ‘தொல்காப்பிய வுரைக்கண் வந்துழிக்காண்க’ என்று மேற்கோள் காட்டாது விட்ட பகுதிகட்கு இவர் மேற்கோள் காட்டியும் விளக்கியுமிருத்தல் முதலியவையும் தமிழ்க் கல்வி மிக்கவர் பலரினும் இவரே மிக்கவரென்பதற்குத் தக்க சான்றாகும். இவர் சிறந்த தமிழ்ப் பாவமுதங்களைச் சுவை தெரிந்துண்டு மனத்தே தேங்க வைத்தவர். இவர் தொல்காப்பிய வுரை முதலியவற்றில் தமிழ் நூல்கள் பற்பலவற்றிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். அந்நூல்களின் பெயர் பிரஹ்மஸ்ரீ மஹா மஹோபாத்யாய தாக்ஷிணாத்ய கலாநிதி உ. வே. சாமிநாதையரவர்களால் பத்துப் பாட்டு சீவக சிந்தாமணி இவற்றில் எழுதப்பெற்றிருக்கும்


1 உரைச்சிறப்புப் பாயிர அகவல் 17 : 30 அடி பார்க்க.

2 திருக்கோவையாருரை இவாதென்னும் தவறான கொள்கை இப்போது மாறிவிட்டது.

3 இவர் தம்முரையை மீட்டும் பார்த்து மாற்றியதில் சிற்சில தடுமாற்றங்கள் உள்ளன.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:09:37(இந்திய நேரம்)