தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


34
ஆசிரியர்கள் வரலாறு


பாட்டு சீவக சிந்தாமணி இவற்றில் எழுதப்பெற்றிருக்கும் நச்சினார்க்கினியர் வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன. அன்றியும் இவர் வட மொழிப் பாலவாகிய வேதங்களின் பொருளையும் பலவகைக் கலைகளையும் அறிந்தவர்.

திருக்குறளுரைகாரருள் ஒருவராகிய நச்சரென்பவரும் இவரும் ஒருவரே யென்று நினைப்பார் சிலரும், மற்றொருவராகிய பரிமேலழகரும் இவரும் ஒரு காலத்தவரென்றும் ‘குடம்பை தனித் தொழிய’ என்னுந் திருக்குறளில் குடம்பை யென்பதற்கு அவருரைத்த பொருளே சிறந்த தென்றும் தமக்கு அது தோன்றவில்லை யென்றும் கூறி இவர் வருந்தினாரென்றும் கூறுவார் சிலரும், திருநாவுக்கரசு நாயனாரைப்போல இவரும் இடையே சைன சமயத்தராயிருந்தாரென்று ஊகிப்பார் சிலரும், ஸாயனாசாரியாரைப்போல் இவரும் தம் மாணாக்கர் பலரையும் ஏவி அவர்களைக்கொண்டு செய்வித்த வுரைகளைக் கேட்டுச் செப்பஞ் செய்து அவற்றைத் தம் முரையாகக் கொண்டா ரென்றிசைப்பார் சிலரும், இவர் கூறும் உரையில் சிற்சில இடத்து மாட்டேறுமிகக் காணப்படுதலாலும், சிற்சில இடத்து கருத்து மிக்க ஆழமுடைத்தாதலால் அறித லரிதாயிருத்தலாலும், இதனில் வெறுப்பும் மற்றொன்றில் விருப்புங்கோடலாலும், இவர்மேற் கூசாமல் குற்றமேற்றுவார் சிலரும் உளர்.

இவருரைகளில் பயிலுங்காலத்தில், அவற்றிலுள்ள நன்மை புன்மைகளைப் பலருமறியக் காரணத்தொடு விளக்கி ‘நச்சினார்க்கினியருரை யாராய்ச்சி’ என ஒன்று எழுதவேண்டு மென்ற கருத்துண்டாகின்றது. எவரேனும் அதனைச் செய்வதற்கு இன்றியமையாத உதவிகளைச் செய்து ஊக்கமளிப்பின் இறைவனருளியிருக்கும் அறிவாற்றலால் அஃது இனிது நிறைவேறும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:09:46(இந்திய நேரம்)