தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai


2. கபிலர்.
17


பற்றியதோ வென்று ஐயுறத்தக்க பொருளினதேனும் இவர் இந்நூலின் கண்ணே ‘நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் குன்று’ என்று நட்பைப்பற்றிப் பாராட்டிக் கூறுதலானும், புறத்தின் கண்ணே பாரியைப்பற்றிக் கூறியிருக்கும் பல பாடல்களானும் நட்புக் குணத்தில் மேம்பட்டவரென்று விளங்குதலால் நட்புப் பற்றிய தென்றே கொள்ளவேண்டும்.

இவ்விருவரும் அக்காலத்தே கடவுண்மை யுடையவரென நக்கீரனாராலேயே மதிக்கப்பெற்ற ஒளியுடையவர்கள்.

இவர் மதுரைத்தமிழ்ச் சங்கப்புலவர்களுள் ஒருவரேயாயினும் பெரும்பாலும் அங்கே வதிந்தவரல்லர். பாவலர்க்கிருக்க வேண்டுமென்னும் நூறியலையும் அடைதலில் ஊக்கத்தாலும் பண்புடையாரொடு பழகுதலில் நோக்கத்தாலும் வியன்மலைகாடெல்லாம் இயலுவாராயினர். அப்போது பறம்பு
மலை கொல்லி மலை தோட்டிமலை முள்ளூர் மலை ஆங்காங்குள்ளகாடுகள் இவற்றிலுள்ள சிறப்புக்களைக் கண்டறிந்துள்ளார்.

இவர் கடையெழுவள்ளல்களுள், அஞ்சி ஆய் அல்லாத ஐவரையும் தம்பாடலில் எடுத்துக்கூறியிருக்கிறார். அவ்வைவருள் ஒரி, நள்ளி என்ற இருவரையும் நேரிற் பார்த்ததாகத் தெரியவில்லை. பேக னென்பவனைக் கண்டு நீ நின்மனைவிக்கு அருளவேண்டும் என்று ஒரு பாடல் பாடியிருக்கிறார். காரியென்பவனைக்கண்டு வரிசையறிந்து ஈபவேண்டுமென்று கழறியும் அவனுடைய வரையாக் கொடையையும் புரையாத்திறலையும் பாராட்டியும் சில பாடல்கள் பாடியிருக்கிறார். பாரியென்பவனோடு நண்புற்று, பறம்புமலையின் கண்ணே பலயாண்டிருந்து குறிஞ்சி வளத்தையும் அக்குரிசிலுளத்தையும் நன்கறிந்தார். அவை அவர்க்கு மகிழ்ச்சி விளைத்ததனால் பெரும்பாலும் அங்கே வதிவாராயினர். இவர் அவனைக்குறித்துப் பாடிய பாடல்கள் பல.

பாரி, தான் சிற்றரசனே யானாலும், பேரரசர் கொடைமுரசு முழங்கக் கொடுப்பதினும் மிகுதியாகவே இரவலர்க்குக் கொடுத்து வந்தான். அதனால், மூவுலகத்தாலும் அவன் கொடைப்புகழே கேட்கப்பட்டது. தமிழ் நாட்டு மூவேந்தரும் அவன் புகழுறு தலைப் பொறாராய்ப் பறம்புமலையை முற்றினார்கள். பறம்பு மலைக் கோட்டை வாயிற் கதவு அடைக்கப்பட்டது. அம்மூவரும் பல யாண்டு போர் புரிந்தனர். அப்போது கபிலர், ‘இவ்வரணோ


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:11:09(இந்திய நேரம்)