Primary tabs
உங்களால் அழித்தற்கியலாது. இம்மலையோ உழவருழாமலே இங்குள்ள வர்க்கெல்லாம் வேண்டிய உணவுகளையளிக்கும். ஆதலால் இம் முயற்சி பயனின்றாம். நீர் பாணராயும் நும்மனைவியர் விறலியராயும் வந்து பாடி யாடினாற் பெறலாம்’ என்று அவரையிகழ்ந்தும் பல படியாகப் பாரியைப் புகழ்ந்தும் பாடினர்.
இறுதியில் மூவரசரும் வஞ்சித்துப் பாரியைக் கொல்லலானார்கள். அந்நிலைமையில் இவர் பெருந்துயருழந்து தம்முயிரைத்துறக்கத் துணிந்தார். துணிந்தும் பாரிதடுத்ததனால் துறவாதிருந்தார். பின்பு அவன் உயிர்துறந்தான். மூவரசரும் பறம்பு மலையைக் கைப்பற்றினார்கள். கபிலர் பாரியின் மகளிரொடு அம்மலையை விட்டுப் பெயர்ந்து அதன் முன்னை நிலையையும் அப்போதை நிலையையும் குறித்து வருந்திச் சில பாடல் பாடினர். பாரியிறந்த துயரைப்பொறாராய்க் கலங்கி யிரங்கி மெலிந்து கழிவிரக்கத்திற் பயனில்லை யென்று பின்பு தெளிந்து அவன் மகளிருக்கு மணம்புரி விக்கத் தக்க காலத்தையும் தக்க கணவரையுங்கருதி வந்தார்.
சிலயாண்டு சென்ற பின் அம்மகளிரை அவர் மரபிலே வாழ்க்கைப்படுத்த நினைந்து விச்சிக்கோன் இருங்கோவேள் என்ற இரு வரையுங் கொள்ளவேண்டியும், அவர் உடம்படாமையால் அம்மகளிரை அவர் மரபினும் உயர்ந்த மரபிலே வாழ்க்கைப்படுத்திப் பெண்ணையாற்றங்கரையிலே திருக்கோவலூர்ப்பக்கத்தே நாற்புற முந் தீச்சூழ வடக்குநோக்கியிருந்து பாரியை நினைந்து ஊழ்வினை மறுபிறப்பிலும் என்னை நின்னொடு கூட்டுவதாகவென்று தவம் புரிந்து உயிர் நீத்தார்.
இவர் வரலாற்றைப் பலரெழுதியுள்ளார். பாரியை வஞ்சித்தவிதம் இன்னதென்று விளங்கவில்லை. மூவேந்தர் பாரியைப் பகைத்தகாரணமும் அவன் மகளிர் மணத்தைக்குறித்த வரலாறும் கபிலர் உயிர்விடுத்த செய்தியும் கபிலதேவ நாயனார் இவரா மற்றொருவரா என்பதும் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. கபிலதேவநாயனார் இவரின் வேறென்பதே என் கருத்து. என்னால் விரிவாக எழுதப்பெற்று வரும் இவர் வரலாற்றில் எல்லாம் ஆதாரத்தோடு விளக்கப்பெறும்.