தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kalithogai


6
மூன்றாஞ் சம்புடத்தின் முகவுரை


னும் மறுப்பார்களா? தமிழில் உண்மை யன்புள்ள இவ்வுபகார சீலர் இங்ஙனமே உலகத்திற்கு நன்மை புரிந்து கொண்டு நீடூழி வாழ வேண்டு மென்று,

திருப்பனந் தாளுறை செஞ்சடை யப்பர்தஞ் சேவடிக்கட்
சுருப்பனந் தாமரை சேர்தலி னுள்ளஞ் சுலாவி யுறும்பண்
புருப்பனந் தாமணி யாஞ்சாமிநாத வுயர்முனிபா
லிருப்பனந் தாவதென் றாருமெங் கோன்புக ழேருறவே.

ஸ்ரீமான் திவான் பஹதூர் பவானந்தம் பிள்ளை அவர்களிடம் நான் பதிப்பித்த கலித்தொகை முதலிரண்டு சம்புடங்களைக் கொடுத்து, அதில் நான் சிரமப்பட்டுச் செய்திருக்கும் வேலைகளிற் சிலவற்றையுஞ் சொன்னேன். அவர்கள்,

‘சொல்வன்மை யுண்டெனிற் கொன்னே விடுத்தொழிதல் 
நல்வினை கோறலின் வேறன்று’

என்றபடி, அதற்கு உதவி செய்யவேண்டும் என்று கருதி, அச் சம்புடங்களைப்பற்றிச் சென்னை School Book and Literature Society யாருக்குச் சிபாரிசு செய்து கலித்தொகை வெளிவரும் செலவிற்கு உபயோகிக்கும்படி இருநூறு ரூபாய் நன்கொடையாக அளிக்கச் செய்வித்தார்கள். இவ்வாறு உதவி செய்யுந் தமிழபிமானிகளிருந்தால் அரிய காரியத்தை மேன்மேலுஞ் செய்ய ஊக்க முண்டாகும். அத் தொகையை அளித்த அச் சங்கத்தாரிடத்தும் அதற்குக் காரணராயிருந்த ஸ்ரீமான் பவானந்தம் பிள்ளையவர்களிடத்தும் நன்றியறித லுள்ளவனாக இருக்கின்றேன்.

எனக்கு இந் நூல் முதலிலிருந்து முழுவதும் பதிப்பித்தற்கு மிக்க உதவியாயிருந்தவர், என் சிறுவனாகிய சிரஜீவி முத்துக்குமார ஸ்வாமியும், சென்னை, மயிலாப்பூர், P. S. High School உபாத்தியாயரும் என் மாப்பிள்ளையும் ஆகிய சிரஜீவி வே. ராமநாதையரும் ஆவர். 

இடையே உதவி செய்தவர் அன்பர் ஸ்ரீமத் உ. வே. பூ. அ. பாஷ்யம் அய்யங்கார் அவர்கள், B. A., L. T.

இப்போது அரும்பத முதலியவற்றின் அகராதியை ஒழுங்கு படுத்துவதற்கும், ஆசிரியர் வரலாற்றை எழுதுவதற்கும் தத்தமக்கு அவகாச முள்ளபோது உடனிருந்து உதவி புரிந்தவர்கள் சென்னை யூனிவர்ஸிடி ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸிடிடியூட் ஸ்டூடெண்டுகளாக இருந்த சிரஜீவிகளாகிய கே. வி. சேஷாசல சர்மாவும், மு. குஞ்சிதபாத தேசிகரும், ந. சிவப்பிரகாச தேசிகரும் ஆவர்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:24:32(இந்திய நேரம்)