Primary tabs
கொங்குவேண் மாக்கதையோ கொள்ளேம் நனியார்வேம்
பொங்குகலி யின்பப் பொருள்’’ என்றும்
அறிஞர்கள் பாராட்டுவாரானது இச்சிறப்புப் பற்றியன்றோ!
இது முதலிற் கடவுள் வாழ்த்தையும், பின்பு பாலை முதலிய ஐந்திணைப் பெயர்களாலமைந்த ஐந்து பகுதிகளையுமுடையது.
இவற்றுள், முதலிலுள்ளது கடவுள் வாழ்த்துச் செய்யுளொன்று. அது மதுரையாசிரியர் நவ்வந்துவனாரால் இயற்றப்பெற்றது. பின்புள்ள ஐந்து பகுதிகளுள்,
முதலாவதாகிய பாலைக்கலி 35 செய்யுட்களை யுடையது. இதனை இயற்றியருளியவர் சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோனென்பார்.
இரண்டாவதாகிய குறிஞ்சிக்கலி 29 செய்யுட்களையுடையது, இதனை இயற்றியருளியவர் கபிலனார்.
மூன்றாவதாகிய மருதக்கலி 35 செய்யுட்களை யுடையது. இதனை இயற்றியருளியவர் மதுரை மருதனிள நாகனார்.
நான்காவதாகிய முல்லைக் கலி 17 செய்யுட்களை யுடையது. இதனை இயற்றியருளியவர் சோழ னல்லுருத்திர னென்பார்.
ஐந்தாவதாகிய நெய்தற்கலி 33 செய்யுட்களை யுடையது. இதனை இயற்றியருளியவர் கடவுள்வாழ்த்துச் செய்யுளை இயற்றிய நவ்வந்துவனாரே.1
இவர்கள் வரலாறுகளும் இதன் உரையாசிரியர் வரலாறும் முழுப்புத்தகத்துடன் பின்னர் வெளிவரும்.
இது தொல்காப்பிய முதலிய நூல்களின்
அகப்பொருட்பகுதிக்கு இலக்கியமாக அமைந்துள்ளது;
இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர்
முதலிய தொல்காப்பிய உரையாசிரியர்களாலும்,
இறையனாரகப்பொரு
(பிரதிபேதம்)
1. மேற்கூறிய கடவுள்வாழ்த்தும்
பாலை முதலிய ஐந்து திணைகளும் இவ்வளவு இவ்வளவு செய்யுட்களையுடையன
என்பது, ‘‘இறைவாழ்த்தொன் றேழைந்து பாலைநாலேழொன்,
றிறைகுறிஞ்சியின்மருத மேழைந்[து] - துறைமுல்லை,
யீரெட்டொன் றாநெய்த லெண்ணான்கொன்றைங்கலியாச்,
சேரெண்ணோ மூவைம்பதே’’ என வித்தியாபானு பத்திரிகையில்
வெளி வந்திருக்கும் வெண்பாவிலுங் குறிக்கப் பெற்றுள்ளது.