Primary tabs
கணபதி துணை
முகவுரை.
நீரார் கலிசூழ் நிலத்தவர்க்குப் - பேரார்வ
முற்றளிக்க வேண்டுளமே 1 யோர்மருப்பன் றாண்முதலைப்
பற்றளிக்கு மக்கற் பகம்.
கலித் தொகை யென்பது, சங்கச் செய்யுட்களென்று தமிழ்மக்களால் நன்குமதித்துக் கொண்டாடப்பெறும் கடைச்சங்ககாலத்துப் பனுவல்களுள் ஒரு பிரிவாகிய எட்டுத்தொகையில் ஆறாவதென்பர்.
றொத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் 2 போற்றுங் கலியோ டகம்புறமென்
றித்திறத்த வெட்டுத் தொகை’’
என்னும் வெண்பாவின் வைப்பு முறை இதற்குக் காரணமாகும்.
இதனை மேற்கணக்கினுள் ஒன்றென்பர் பன்னிரு பாட்டியலுடையார்; இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்த தென்பர் நச்சினார்க்கினியர்.
இது சொற்சுவை பொருட்சுவைகளில் மிகச் சிறந்தது.
3‘‘திருத்தகு மாமுனிசிந் தாமணிகம்பன்
விருத்தக் கவிவளமும் வேண்டேம்-திருக்குறளோ