தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai




8
முகவுரை

இவர் தொகுத்துக் கோத்தமுறை முற்கூறியமுறையேயென்பது நச்சினார்க்கினியர் 1 இந்நூலுரையில் எழுதியிருக்கும் வாக்கியத்தாலும்

‘‘1போக்கெல்லாம் பாலை புணர்த னறுங்குறிஞ்சி
2யாக்கமளி யூட லணிமருத - நோக்கொன்றி
யில்லிருத்தன் முல்லை யிரங்கிய 3போக் கேர்நெய்தல்
புல்லுங் 4கலிமுறை கோப்பு’’

என்னும் வெண்பாவாலும் அறியப்படுகின்றது.

இங்ஙனம் தொகுத்தாரிவரென்பதை யடுத்துத் தொகுப்பித்தா ரின்னவரென்பது கூறப்படாமையால் இவர் இதைப் பிறர் வேண்டத் தொகுக்காது தாமாகவே தொகுத்திருக்கலாமென்று தோற்றுகிறது.

சில தொகைகள் தொகுத்தவருடைய பாடலில்லாதனவாயும் ஒன்றிரண்டே யுடையனவாயும் இராநிற்க, இத்தொகை தொகுத்தவருடைய பாடல் 34 உடையதாய்ச் சிறந்து விளங்குகின்றது.

இந்நூல் முழுவதுக்கும் பேருரையாளராகிய நச்சினார்க்கினியரால் உள்ளுறைப்பொருள் முதலிய நயங்களும் மெய்ப்பாடும் பயனும் பாவகையும் விளங்கச் சிறந்த உரை எழுதப்பெற்றிருப்பதனால் இது பலரும் பொருளறிந்து இன்புறுதற்குத் தக்கதாயிருக்கின்றது.

இத்தொகை காலம் நீட்டித்ததனால் ஏனைத்தொகைகள் அடைந்த சில சிதைவுகளை மூலம் உரை இரண்டினும் ஒரு சிறிதும் அடையாது, இன்னும் பல சுவடிகள் வடிவாய்க் காணும்படி யிருப்பதற்குக் காரணம். ‘இது குறையுறாது நின்று நிலவ வேண்டும்’ என்னும் இறைவன் திருவுளமாம்; தமிழ்மக்கள் செய்த தவப்பேறுமாம். இந்நிலைமையால் இது கற்றறிந்தார் போற்றுங் கலியாயுள்ளது.

இதனை மேற்கூறிய உரையுடன் ஸ்ரீமான். சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள், 1887-ம் வருடத்திற் பதிப்பித்தார்கள். அதில், இது ‘‘நல்லந்துவனார் கலித்தொகை’’ என்று குறிக்கப்பெற்றிருந்தாலும் தொகை


         1. இந்நூல் 12 ஆவது பக்கம் பார்க்க.

        (பிரதிபேதம்) 2. ‘‘ஆக்கஞ்சே ரூட லணிமருதம் - நோக்குங்கா, லில்லிருத்தன் முல்லையிரங்க னறுநெய்தல், சொல் விரிந்த நூலின் றொகை’’ என்பது நாற்கவிராச நம்பி அகப்பொருள்விளக்க இறுதியில் உள்ளது. ஆக்கமணி யூட லமர்மருதம்.

        (பிரதிபேதம்) 3. போக்கோ நெய்தல்.

        (பிரதிபேதம்) 4. கலித்தொகை கோப்பு.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:26:41(இந்திய நேரம்)