தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kalithogai




முகவுரை
 

11
 

5. பண்டைக்காலத்து இலக்கியங்களிலும் பிற்காலத்து இலக்கியங்களிலும், சொல்லினும், பொருளினும், சொற்பொருளினும், இதற்கொத்த பகுதிகளையும் இதிலிருந்து கிளைத்த பகுதிகளையும், பல சமயத்தவர்க்கும் தமிழின்கண் அன்பு மிகுமாறு பல மதநூற் பாடல்களிலுமிருந்து எடுத்து ஒப்புநோக்கும்படி பாட்டு அல்லது உரையில் எண்களிட்டு அவ்வப்பக்கத்தின் அடியில் அவ்வெண்களைக் கொடுத்துச் சேர்த்திருத்தல்.

6. விளக்கவும் சேர்க்கவும் வேண்டியவை விடுபட்ட இடங்களில் மேற்கோள்களின்முன், பின் அவை குறிப்பதற்குக் கருவியாக அ, ஆ முதலிய எழுத்து வரிசைகளை அமைத்திருத்தல்.

7. உள்ளவற்றிற் பொருந்தா வென்று தோற்றியவற்றை [] இருதலைப் பகரத்துள்ளும், பொருந்துமென்று தோற்றியவற்றை () நகவளைவினுள்ளும் இசைத்திருத்தல்.

8. உரையாசிரியர் கூறிய பொருளன்றி வேறு பொருளும் இயையுமாயின் அதனையும் ஆங்காங்கு எண்களிட்டுக்குறித்திருத்தல்.

9. நூலாசிரியர், உரையாசிரியர் வரலாறுகளும் அரும்பத முதலியவற்றின் அகராதியும் எழுதிச் சேர்த்தல் முதலியவையாம்.

இந்நூலை நாளிது 1924-ஆம் வருடம் டிசம்பர் மாத முடிவுக்குள் முழுதும் பதிப்பித்து வெளியிடக்கருதி முயன்றுவந்தும் பல இடையூறுகளால் அவ்வாறுசெய்ய இயலவில்லை. என் நண்பர்கள், இப்போது முழுப்புத்தகமும் கிடைக்குமென்று எதிர்பார்க்கும் தமிழபிமானிகட்குச் சிலபாகமாவது கிடைக்கும்படி அச்சானமட்டில் வெளியிடுவது நன்றென்று வற்புறுத்தினமையால், இப்போது நிறைவேறியிருக்கும் கடவுள்வாழ்த்து முதலாகக் குறிஞ்சிக்கலி இறுதியாகவுள்ள பகுதிகளை முதற்சம்புடமாக வெளியிடலானேன். பிழைதிருத்தமும் அரும்பத முதலியவற்றின் அகராதியும் பிறவும் புத்தக முடிந்தபின் வெளிவரும். இதுவும் நிற்க.

இக்கலித்தொகையைப் பதிப்பிக்க என் அகத்தே துணிவைத் தந்தது, புறத்தின் ஓரடியாகிய, ‘‘பெரிதே யுலகம் பேணுநர் பலரே’’ என்பது.

நற்றிணையிற் பிறந்து தமிழறிவுடையரான செல்வர்கள், இதிற் பதிப்பித்திருக்கும் குறிப்புக்களை ஒருவன் சேர்த்தற்கும் பலபிரதிகளோடு கண்ணூன்றி ஒப்புநோக்குதற்கும் எவ்வளவுகாலம் உழந்திருக்க வேண்டுமென்பதை மனத்தால் நோக்கி, இதன் விலையைக் குறுந்தொகையாக மதித்து, தத்தம் தகுதிக்கேற்ப இதனில் ஐந்து பத்துப்பிரதிகளைப் பெறத்துணிந்து, ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்துமாகிய


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:27:07(இந்திய நேரம்)