தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Kalithogai




12
முகவுரை


ரூபாய்களை முன்பணமாக வுதவி, இதனைக்கைக்கொண்டு பரிபாடல் (பரிபு+ஆடல்=பரிந்தாளுதல்) செய்வதைத் தமது கடமைகளுள் ஒன்றென்று கொள்வராயின், அஃது இக்கலித்தொகை முழுதும் விரைவில் வெளிவருவதற்குப் பெரிதும் உதவிசெய்வதாகும். இதுபோலவே இன்னும் சில நூல்களை வெளியிடுவதற்கு ஊக்கத்தை அளிப்பதுமாகும்.

முற்கூறிய பிரஹ்மஸ்ரீ மஹாமஹோபாத்தியாயர் உ. வே. சாமிநாதையரவர்கள் முதலில் இதனைப் பதிப்பித்தற்குச் செலவு செய்து கொள்ளும்படி தாமே ரூ. 150 வலிந்தளித்து, கலித்தொகை அச்சுப்பிரதியொன்றும், ஒப்புநோக்கிக்கோடற்குத் துணையாக ஏட்டுப் பிரதிகள் இரண்டும், அவ்வப்போது நான் பார்த்துக்கொள்ளுதற்கு இதுகாறும் அச்சிடப்பெறாதனவும் அச்சிடப்பெற்றிருந்தும் கிடைத்தற்கு அரியனவுமாகிய புத்தகங்கள் சிலவும் தந்துதவி, சந்தித்த காலங்களில் எதுவரை நடந்திருக்கிறது என்று வினாவியும் அச்சிட்டு வரும் பகுதியைப் பார்த்தபோது, ‘இக்குறிப்புக்களை நோக்க இவை நெடுங்காலமாகச் சேர்த்து வைத்திருந்தவை என்று தோற்றுகிறது’ என்று சொல்லியும் இன்புறுத்தி வந்தார்கள். தமிழினருமையை யறிந்து இன்புறுபவர்களும் பல பண்டைத் தமிழ் நூல்களை ஆராய்ந்து பலவகைக்குறிப்புக்களுடன் அரும்பத முதலியவற்றின் அகராதியும் புதிதாக எழுதிச் சேர்த்து அச்சிட்டு இறவாதிருத்தித் தமிழ்நாட்டிற்குப் பேருதவிபுரிந்து புகழ் பொருள் பெற்றிருப்பவர்களுமாகிய அவர்கள் இவ்வாறுதவிசெய்து எனக்கு ஊக்கத்தை யுண்டாக்கியதற்காக அவர்கட்கு என் நன்றியறிதலோடு வந்தனத்தையும் மனநிறைவாகச் சேர்ப்பிக்கிறேன். அவர்கள் அளித்த ரூபாய்த் தொகையானது இத்தொகையிலுள்ள செய்யுளொவ்வொன்றையும் தாம் பாராட்டுவதற்கு அறிகுறியாகவும் தோற்றுகிறது.

ஏடுகள் தேடிவைக்கத்தக்க தமிழபிமானிகளிடம் கேட்பது போல மேரிராணிக் கலாசாலைத் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமான், கா. நமச்சிவாய முதலியாரவர்களிடத்தும், கொழும்பு யூனிவர்ஸிடி காலேஜ் லெக்சரர் ஸ்ரீமான், எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை எம். ஏ., எல். டி. அவர்களிடத்தும் நான் கலித்தொகையைப் பதிப்பிக்கக் கருதியிருப்பதைத் தெரிவித்து அவ்வேட்டுச் சுவடிகள் உங்களிடமிருந்தாலும் உங்கள் அன்பர்களிட மிருந்தாலும் சில மாதம்வரை என்பார்வைக்கு உதவவேண்டுமென்று கேட்டபொழுது இந்நாள்காறும் என்னால் ஒருபயனையும் அடையாத அவர்கள் தாங்கள்வேறு ஏட்டுப் பிரதிகளோடு ஒப்பிட்டுப் பிரதிபேதங்கள்குறித்துவைத்திருந்த அச்சுப்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:27:15(இந்திய நேரம்)