தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

ஏறாண் முல்லை

ஏறாண் முல்லை
86
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன்
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும்
புலி சேர்ந்து போகிய கல் அளை போல,
5
ஈன்ற வயிறோ இதுவே;
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே!
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
காவற்பெண்டின் பாட்டு.

296
வேம்பு சினை ஒடிப்பவும், காஞ்சி பாடவும்,
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்,
எல்லா மனையும் கல்லென்றவ்வே;
வேந்து உடன்று எறிவான்கொல்லோ
5
நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே?
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
வெள்ளைமாளர் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:10:42(இந்திய நேரம்)