தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

குதிரை மறம்

குதிரை மறம்
273
மா வாராதே; மா வாராதே;
எல்லார் மாவும் வந்தன; எம் இல்,
புல் உளைக் குடுமிப் புதல்வற் தந்த
செல்வன் ஊரும் மா வாராதே
5
இரு பேர் யாற்ற ஒரு பெருங் கூடல்
விலங்கிடு பெரு மரம் போல,
உலந்தன்றுகொல், அவன் மலைந்த மாவே?
திணை தும்பை; துறை குதிரை மறம்.
எருமை வெளியனார் பாடியது.

299
பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி,
கடல் மண்டு தோணியின், படை முகம் போழ
நெய்மிதி அருந்திய, கொய் சுவல் எருத்தின்,
5
தண்ணடை மன்னர், தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின், இகந்து நின்றவ்வே.
திணை நொச்சி; துறை குதிரை மறம்.
பொன்முடியார் பாடியது.

302
வெடி வேய் கொள்வது போல ஓடி,
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட;
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய
5
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க்
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
10
விண் இவர் விசும்பின் மீனும்,
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே.
திணை அது; துறை குதிரை மறம்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

303
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ,
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப
5
ஆட்டிக் காணிய வருமே நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்,
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப் பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.
திணையும் துறையும் அவை.
எருமை வெளியனார் பாடியது.

304
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
5
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
10
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே.
திணையும் துறையும் அவை.
அரிசில் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:13:15(இந்திய நேரம்)