தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

நூழிலாட்டு

நூழிலாட்டு
309
இரும்பு முகம் சிதைய நூறி, ஒன்னார்
இருஞ் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே;
நல் அரா உறையும் புற்றம் போலவும்,
கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும்,
5
மாற்று அருந் துப்பின் மாற்றோர், 'பாசறை
உளன்' என வெரூஉம் ஓர் ஒளி
வலன் உயர் நெடு வேல் என்னைகண்ணதுவே.
திணை தும்பை; துறை நூழிலாட்டு.
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் பாடியது.

310
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்,
5
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.
திணையும் துறையும் அவை.
பொன்முடியார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 00:21:31(இந்திய நேரம்)