தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பல் சான்றீரே! பல் சான்றீரே! குமரி மகளிர்

பல் சான்றீரே! பல் சான்றீரே! குமரி மகளிர்
301
பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அரு முள் வேலிக்
கல்லென் பாசறைப் பல் சான்றீரே!
5
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்;
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்;
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால்
10
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே?
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண்
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி,
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி,
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென
15
வேந்து ஊர் யானைக்கு அல்லது,
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே.
திணையும் துறையும் அவை.
ஆவூர் மூலங் கிழார் பாடியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 01:46:53(இந்திய நேரம்)