தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai


(5) கல்வி ஒரே குலத்திற்குச் சிறப்புரிமையாகாது எல்லா வகுப்பார்க்கும் பொதுவாயிருத்தல்.

(6) ஆரிய நால்வரணப் பகுப்பு உலகில் பிராமணருள்ள இந்தியாவில் மட்டுமிருத்தல்.

(7) ஆரிய நால்வரணத்திற்கு மூலமான (அந்தாணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும்) தமிழ நாற்பாற் பகுப்புத் தொழிலையே அடிப்படையாகக் கொண்டுருந்தமை.

(8) அறிவுவளர்ச்சியினால் நால்வரணப் பகுப்புப் படிப்படியாகச் சிதையுண்டு வருதல்.

இங்ஙனமிருப்பதால், கண்ணபிரான் கடவுளின் தோற்றரவாயின் (அவதாரமாயின்), நானே நால்வரணத்தையும் படைத்தே னென்று கூறியிருக்கமுடியாது; கூறியிருப்பின் கடவுளின் தோற்றரவா யிருந்திருக்க முடியாது.

பகவற்கீதை பதினெண்ணதிகாரங்களையும் எழுநூறு சொலவங்களையும் (சுலோகங்களையும்) உடையது. இதிலடங்கியுள்ள விரிவான செய்தியை ஒருமெய்ப்பொருளியல் மாநாட்டுத்தலைவர் கூடச் சொல்லியிருக்க முடியாது. ஒரு மாபெரும் போர்க்களத்தில் இருதிறத்தும் நால்வகைப் படைகளும் அணியமாகிப் போருக்கு முனைந்து நிற்கும் வேளையில். இத்தகைய ஒதுவம் (உபதேசம்) ஒருபக்கப் படையின் முன்னணியில் நடைபெற்றதெனின் . அதை நம்புபவன் பரமார்த்தகுரு மாணவனாகவே யிருத்தல் வேண்டும்.

மேலும், அருச்சுனனுக்கும் கண்ணபிரானுக்கும் இடையே நடைபெற்ற உரையாட்டைச் சஞ்சயன் கேட்டுத் திருதராட்டிரனுக்கு அவ்வப்போது அறிவித்தானென்றிருப்பது, இக்காலத்து ஒலி பெருக்கியும் (Microphone) உரத்தொலிப்பான்களும் (Loudspeakers) ;நிறைந்த மாநாட்டுச் சொற்பொழிவொன்றை, அவைக்கோடியிலுள்ள ஒருவன் கேட்டு அருகிலுள்ள குடுட்டுச் செவிடனுக்கு எடுத்துச் சொல்வது போன்றே இருக்கின்றது.

தமிழகத்து இருபெருமதங்களுள் மூத்ததான சிவனியம்(சைவம்) கண்ணபிரானின் தோற்றரவுத் தன்மையை ஒப்புக்கொள்ளவுமில்லை.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:00:07(இந்திய நேரம்)