தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai


தரும் கணிப்பில்காலம் ஆண்டு வந்தனரென்பதும், அவருள் முன்னோன் பாண்டியன் என்பதும் வெள்ளிடைமலையாம். ஆகவே, அரசியல் நூலான பொருள் நூல் குமரிநாட்டுப் பாண்டியரிடையே முதன்முதல் தோன்றினதாகும். அதனால் தமிழரிடத்தினின்றே சுக்கிரர் என்னும் ஆரிய அமைச்சர் பொருணூலைக் கற்றிருத்தல் வேண்டும். அவர் நூலின் வழிநூலாகவே பாருகற்பத்தியமும் அவ்விரண்டின் சார்பு நூலாகவே கௌடிலீயமும் தோன்றியிருத்தல் வேண்டும்.

13. திருக்குறளின் தன்னேரின்மை

எல்லா நாட்டார்க்கும் எக்காலத்திற்கும் ஏற்றவாறு, இல்லற வாழ்க்கையும் செங்கோலாட்சியும் எடுத்துக் கூறுவது திருக்குறள் ஒன்றே. நால்வேதமும் பாரதமும் மனுதரும சாத்திரமும் கூறுவது அவற்றைப் பாடியவரின் அறியாமை, அடிமைத்தனம், ஒப்புநோக்குந் திறமின்மை ஆகியவற்றையே ஒருங்கே காட்டும்.

இனி, இக்காலத்தும், ஆரியருந் தமிழருமான பலர் பகவற்கீதையைத் திருக்குறட்கு ஒப்பாகக் கூறத் துணிகின்றனர். கண்ணபிரான் அருச்சுனனுக்கு அறிவுறுத்தியதெல்லாம், போர்க்களத்திற் பொருமறவன் பகைப்படையிலுள்ள உறவினரை நோக்காது ஊக்கமாகப் பொருது தன்கடமையைச் செவ்வனே நிறைவேற்றவேண்டு மென்பதே. இதைப் பிற்காலத்து ஆரிய இனவெறியனொருவன் பெரும் பயன்படுத்திக்கொண்டு, பிராமணன் சத்திரியன் வைசியன் சூத்திரன் என்னும் நால் வரணத்தையும் இறைவனே படைத்தானென்னும் நச்சுக் கருத்தை, அதிற் சூழ்ச்சியாகப் புகுத்தியிருக்கின்றான்.

நால்வரணம் இறைவன் படைப்பன்மைக்குச்சான்றுகள்

(1) முதற்கால அநாகரிக மாந்தர் வகுப்பு வேறுபாடின்றியே யிருந்தமை.

(2) இயற்கையான வகுப்புவேறுபாடு நிறத்தாலன்றித் தொழிலாலேயே ஒரு நாட்டில் ஏற்பட்டுள்ளமை.

(3) தொழிலுக்குப் பிறப்பொடு தொடர்பின்மை.

(4) தொழில் விருப்பப்படியும் திறமைப்படியும் மாற்றக் கூடியதாயிருத்தல்.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 03:59:58(இந்திய நேரம்)