தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thirukural-Devaneyan-Tamil Marapurai

அறம் முதலிய நான்கும் திருக்குறள்போல் ஒருங்கே யன்றித் தனித்தனியே கூறும் நூல்களும் உள. அறத்திற்குப் பழமொழி, நன்னெறி, நீதிநெறிவிளக்கம் முதலியனவும், இன்பத்திற்குக் கோவை நூல்களும் வீட்டிற்குத் திருமந்திரம், மெய்கண்டநூல் முதலியனவும் எடுத்துக்காட்டாம். பண்டைப் பொருள் நூல்களெல்லாம் அழிந்து போனமை.

"ஏரண முருவம் யோகம் இசைகணக் கிரதஞ்சாலம்
தாரண மறமே சந்தந் தம்பநீர் நிலமு லோகம்
மாரணம் பொருளென் றின்ன மானநூல் யாவும் வாரி
வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள."

என்னுந் தனிப்பாடலால் அறியப்படும்.

இந்நூற்றாண்டுத்தொடக்கத்தில் பாலவநத்தம் வேள் பாண்டித்துரைத் தேவர் தொகுத்துவைத்திருந்த ஆயிரக் கணக்கான பழைய தமிழ் ஏட்டுச் சுவடிகளும் நூல்களும். மதுரைத் தமிழ்க்கழகத்தில் தமிழ்ப்பகைவரால் தீக்கிரையாக்கப்பட்டன. அவற்றுள் என்னென்ன நூல் இருந்தனவோ , இறைவன் தான் அறிவான்.

இன்று சமற்கிருதத்திலுள்ள பொருள் நூல்களெல்லாம், இறந்து பட்ட பழந்தமிழ் நூல்களின் வழிநூலும் மொழிபெயர்ப்புமே, மூல நூலில்லாக் காலத்தில் படிகளே மூலமாகக் காட்சியளிக்கின்றன. ஆரியர் தமிழைக்கெடுத்த அடிப்படை வகைகளுள் ஒன்று மூலநூலழிப்பாம் இற்றை வடமொழிப் பொருள்நூல்களுள் முதன்மையானவை பாருகற்பத்தியம், ஒளசநசம், கௌடிலீயம் என்பன. இவற்றை இயற்றினோர் முறையே, வியாழன் (பிருகற்பதி), வெள்ளி, (சுக்கிரன்), சாணக்கியர் என்போர். இவருள் தலைமையாக மதிக்கப்பட்டவர் சுக்கிரரே. இதை , சாணக்கியர் தம் நூற்றொடக்கத்தில் "சுக்கிரற்கும் பிருகற்பதிக்கும் வணக்கம்" என்றும், கம்பர் தம் இராமாயணத்தில் "வெள்ளியும் பொன்னும் என்போர் விதிமுறை" என்றும் சுக்கிரரை முன்வைத்துக் கூறியிருத்தலால் அறிக.

சுக்கிரர் அசுர குருவென்றும் பிருகற்பதி சுரகுரு அல்லது தேவகுரு என்றும் சொல்லப்படுவர் ஆராய்ந்து நோக்கின், ஆரியத் தொல்கதைகளில் புராணங்களில் அசுரர் என்பாரெல்லாம் தமிழ அல்லது திரவிட அரசரென்றும், தேவர் என்பாரெல்லாம் பிராமணரென்றும் , அறியப்படும். மாவலி என்னும் மாபெருஞ் சேரவேந்தன் மகாபலி என்னும் அசுரனாகக் கூறப்பட்டிருப்பதே இதற்குப் போதிய சான்றாம், ஆரியர் இந்தியாவிற்குட் புகுமுன்னும், ஆரியம் என்னும் பேரே உலகில் தோன்றுமுன்னும், தமிழகத்தை மூவேந்


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:17:23(இந்திய நேரம்)