தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Iinthinai Iimbathu

முதல் ஆறடி யீறாகவுள்ள வெண்பாவினாலேனும்,அதனினத்தாலேனும் நாற்பது செய்யுள் முதல், ஆயிரக்கணக்கா னியன்ற செய்யுள்வரை அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருள்களில் யாதானு மொன்றினையெடுத்துக் கூறும் நூல்களின் தொகுதி யென்பதாம்.

‘ஐந்திணையைம்பது’ என்னு மிந்நூல் அம் முப்பொருள்களி லொன்றாகிய இன்பத்தினை எடுத்து விளக்கிச் சொல்வதாகும். முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்திணைகளாகிய இருத்தல், புணர்தல், ஊடல், பிரிதல், இரங்கல் என்ற ஐந்தொழுக்கங்களும் இந்நூலிற் பப்பத்து வெண்பாக்களாக ஐம்பது வெண்பாக்களாற் கூறப்பெற்றுள்ளன. அதனானேயே இந்நூலிற்கு ‘ஐந்திணையைம்பது’ என்ற பெயர் வரலாயிற்று. இந்நூல் அன்பின் அமைதியாகிய ஐந்திணையொழுக்கங்களைச் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் நேர்மை தமிழ் மக்கள் யாவரும் மனத்தகத்தே கொண்டு மகிழவேண்டிய தொன்றாம். இது கருதியே பாயித்தின்கண், “ஐந்திணையைம்பதும் ஆர்வத்தி னோதாதார், செந்தமிழ் சேராதவர்,” என இந்நூலில் சிறப்பித்துக் கூறப்பெற்றுள்ளது. அன்பின் அணிமுடியாகிய கற்பின் றிறனைச் செப்பும் முல்லை முதற்கட் கூறப்பட்டு, பின் அன்பின் விளைவாகிய புணர்தலும், அப்புணர்ச்சிக்குச் சிறப்பினை நல்கும் ஊடலும், அவ்வூடற்கு முதலாகிய பிரிதலும், அப்பிரிவின் மிகுதியான் வெளிப்படும் இரங்கலும் முறையே வைக்கப் பெற்றுள்ளன.

முல்லையை முதற்கட் டொடங்கிய ஆசிரியர் முல்லைத் திணைக்குரிய முதற் கருப்பொருளாகிய மாயோனையும், அவன் மருகனாகிய முருகனையும், செந்தமிழ்த் தெய்வமாகிய சிவபெருமானையும் முன்னர்க் கொண்டு முல்லையினைச் சிறப்பித்துச் செல்லல், ஓரம்பினா லிருபுள்ளினை வீழ்த்திய வோவியச் செய்தியேயாகும். இனி, முல்லையுள் முதலைந்து செய்யுட்களில் முல்லையின் முதற்பொருளாகிய கார்காலத் தோற்றத்தினைக் கற்பார்தங் காட்சியிற் படம் பிடித்துக் காட்டுவார்போற் கூறுந்திறன் மிகுதியும் போற்றத் தக்கதாம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 04:58:56(இந்திய நேரம்)