எல்லாம் வல்ல இறைவற்கு எனது வணக்கம் உரியதாகுக ! இதனை வெளியிட் டுதவிய தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கும், இதனை வெளியிடுங்கால் அன்பு கூர்ந்து பார்வையிட்டுத் திருத்தங்கள் செய்து உதவிய மேற்படி கழகவெளியீட்டுக் குழுவுறுப்பினரும், பாளையங்கோட்டை அர்ச் சவேரியர் கல்லூரித் தலைமை தமிழாசிரியரும் ஆகிய உயர்திரு வித்துவான் பு. சி. புன்னைவனநாத முதலியாரவர்கட்கும் யான்
என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையேன்.