Primary tabs
“வெண்டளை விரவியு மாசிரியம்
விரவியும்
ஐஞ்சீ ரடியு முளவென மொழிப.”
என்ற தொல்காப்பிய விதிப்படி ஐஞ்சீர் கொண்டு வந்துள்ளது. இந்நூலினை இயற்றிய. ‘மாறன் பொறையனார்’ என்பார், பாயிரத்தின்கண், “வண் புள்ளிமாறன் பொறையன்,” எனக் கூறப்படுதலான், ‘பொறையன்’, என்ற இயற் பெயரோடு, ‘மாறன்,’ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றுப் பாண்டிநாட்டு அரசியலிற் பெருநிலை யொன்றைப் பெற்றிருந்த பெரியார் எனக் கருதப்படுகின்றனர். இவரைப் பற்றிய செய்தி வேறொன்றும் விளக்கமாகக் காணுதற் கில்லை. இந்நூலிற்கு அருமையான பழைய பொழிப்புரையும், கருத்துரையும் காணப்படுகின்றன. அவற்றை இயற்றிய அறிஞரும் நம்மாலறிய வொண்ணாத அரும் பெரும் நிலையினையே கொண்டுள்ளார். அப் பழையவுரையினைச் சார்ந்த கருத்துரை சில விடங்களிற் பாட்டின் போக்குக்கு மாறுபட்டுக் காண்கின்றது. அப் பழைய பொழிப்புரையும் பல விடங்களிற் கற்போர்க்குக் கருத்தினை மயங்கச் செய்வனவாய்க் காணப்படுதலின், பதவுரையும் விரிவுரையும் சேர்த்து வெளியிட முன்வரலாயினன். பெரும் புலவர்கள் புகுந்து செய்யவேண்டிய இப்பணியினை முடிக்க யான் முன் வந்தது, பல அறிவாளிகளின் உள்ளத்தே கிளர்ச்சியைப் பெருக்கி, இந்நூலிலுள்ள பல அரும் பொருள்களை அவர்கள் வெளியீட்டாற் கண்டு மகிழ்வதற்கேயாமென்க.
ஆதலின், இதனைக் கண்ணுறும் பெரியோர்கள் யான் அறியாமையாற் கொண்டுள்ள பிழைகளை எடுத்துக் காட்டி என்னை மன்னிக்கவேண்டுவ தோடு தமிழ் மகளைப் பல நல்லுரைகளான் மணமகளாக்க மன்றாடுகின்றனன். தோன்றாத்துணையாக முன்னின்று இதனை முடிப்பித்த