தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thinaimozhi Iimbathu


இரங்குவர் என்பதனை இரங்கலாகிய நெய்தலான் இறுதிக்கண் நிகழ்த்திச்சென்ற இந்நூலாசிரியரின் திறம் பெரிதும் நீளநினைந்து களிக்கற்பாலதாம்.

இன்னும், குறிஞ்சிக்கண் நெருப்பருகே நெருங்கிக் குளிர்காயும் வழக்கமும், தலைவனைத் தோழி இரவுக்குறி நயப்பிக்கும் எழிலும், இடையிடையே இறைச்சிப் பொருள்களைக் கையாளும் ஏற்றமும், குறிஞ்சிநிலப் பண்புகளைக் கூறி விளக்கும் முறைகளும் கொண்டாடற் குரியனவாம். பாலைக்கண் அந்நிலக் கொடுமையினைப் பலபடியாகப் பகர்ந்து வருங் காலத்தேயே, தோழி தலைமகளைத் தேற்று முறையிலும், தலைமகன் உடன் போக்கில், செல்லும் வழியின் சிறப்பினை எடுத்துக்காட்டும் இயல்பிலும் படிப்பார் காண விரும்பும் காட்சிகள் பல தோன்றுதல் பலரும் உணர்ந்து உவகையுற வேண்டிய தொன்றாம். மேலும் மகட் போக்கிய நற்றாய் கூற்றாகப் படிப்போர் நெஞ்சம் பதறுமாறு பாலைநிலை காணப்படுவதும் பார்த்து மகிழற்குரியதாம்.

முல்லைக்கண் முல்லைநிலக் காட்சிகளும், கார்காலத் தோற்றங்களும், மாலை வேளைகளின் மாண்புகளும் பல வழியாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளன. மருதத்தின்கண் எடுத்துக் கொள்ளும் அகப்பொருட் செய்திகளை இறைச்சிப் பொருள்களால் எழிலுறச் செய்யும் நேர்மை நிறைந்து காணப்படுகின்றது. தேன்வண்டுகள் வேனிற்காலத்துத் தேன் சேர்க்கும் முறையும், தோழி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:05:38(இந்திய நேரம்)