தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thinaimozhi Iimbathu-அடுத்தப்பக்கம்


முகவுரை

பதிணெண் கீழ்க்கணக்கு நூல்களுள், ஐந்திணை நூல்கள் நான்காம். அன்பி னைந்திணையாகிய அகப்பொருளை விரிக்கும் இந்நான்கு நூல்களுள் ஐந்திணை யைம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை யெழுபது என்ற மூன்று நூல்களும், அன்பர் சிலரின் தூண்டுதலால், கிடைத்த பழையவுரைகளுடன் எளிய பதவுரையினையும் எழுதிச் சேர்க்கப்பெற்று, சின்னாட்கட்கு முன்னர் வெளியிடப்பட்டன. அவற்றைக் கண்ட அன்பர் பலர் இம்முறை பயன்பெறுமவற்றுள் ஒன்றெனக்கூறியமையால், ஊக்குவிக்கப் பெற்று, திணைமொழி யைம்பது என்னும் இந்நூலையும் பழைய பொழிப்புரையுடன் புதிய பதவுரையும் எழுதிச் சேர்த்து வெளியிட முன்வரலாயினன்.

திணைமொழி யைம்பது என்னும் இந்நூல், ஐந்து திணைகளையும் திணையொன்றுக்குப் பத்துப் பாக்களாக ஐம்பது பாக்களால் மொழிவதாகும். இதன்கண் புணர்ச்சியாகிய குறிஞ்சியை முன்னர்க் கூறி, அதனை யடுத்து நிகழும் பிரிவாகிய பாலையினைப் புணர்ந்தார் பிரிவர் எனப் புலனுறப் பின்னர்ப் புணர்த்தி, அப்பிரிவினைப் பொறுத்தலாகிய கற்பு முல்லையை அடுத்துக் கழறி, பொறுமைக்கு ஆறுதலாம் ஊடலும் கூடலுமாகிய மருதத்தினைப் பின்பு வழக்குறுத்தி, உலக நிலைமையில் இறுதியில் எவரு முற்றுழன்று


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:06:07(இந்திய நேரம்)