Primary tabs
திணைக்கேற்ப, நெய்தனிலக் கருப்பொருள்களிலென்றாகிய முத்துக்களைக் கைக்கொண்டது பெரிது முன்னற்பாலதாம். இடையிடையே காணப்பெறும் பகற்குறிப் பாங்குகளும், இரவுக் குறியமைந்த இடத்தின் சிறப்புகளும் எண்ணி யெண்ணி இன்புறற் குரியனவாம். மேலும். "ஒருதிரை யோடாமுன் இருதிரை மோதும் வளமை,” என்ற கடற்கரை இயற்கைக் காட்சி எடுத்தியம்பப் பெற்றுள்ள நேர்மை, அக்காலப் புலவரின் மனத்தே எளிய காட்சிகளும் வலியுற்று நின்றன எனக் காட்டாநின்றது.
பாலைக்கண் அந்நிலக் கொடுங் காட்சிகள் பலபடியாக விரிக்கப்பட்டுள்ளன. பாலைக்கு நிலமின்றெனுங் கொள்கையை மேற்கொண்டு, நெய்தற்கட் பாலையும்., குறிஞ்சிக்கட் பாலையும் இடையிற் கொள்ளக்கிடக்கின்றன. பெண்மக்கட்கு இடக்கண்ணாடல் நல்லறி குறியென்பதும், படிமத்தாளின் தெய்வ வன்மையால் ‘எதிர்கால நிகழ்ச்சிகளை யறிய விரும்புதலும் அக்கால மரபென இதன்கண் அறியலாம். எண்பத்தோராவது செய்யுட்கண் சுருங்கச் சொல்லலாலும், இரட்டுற மொழிதலாலும் எடுத்துக் கொண்ட பொருளை விளக்கிச் செல்வது வியக்கற்பாலதாம். எல்லா இன்பங்கட்கும் காரணமாய பொருளாலும், சென்ற விளமைக்காலத்தைப் பெறவிய லாதென்ற பெற்றியும், பெண்மக்களை அறனிற நோக்கா ஆண்மை நிறையும் எண்பத்தைந்து, எண்பத் தொன்பதாவது செய்யுட்களின்கண் முறையே சிறப்புற்றுத் தென்படுகின்றன.
முல்லை
முதற்கண் எதிர்ப்படுஞ் செய்யுளினிடத்தே
"இருங்கடன்மா கொன்றான் வேன்மின்னி,” எனக் கார் காலச் சிறப்புக் கூறுமிடத்தில் முருகன் புகழ் கூறப்படுகின்றது, இஃதே போன்று, ஐந்திணையைம்பது என்ற நூலின்கண் நூலின் முதலும்,
முல்லையின் தொடக்கமுமாகிய செய்யுளின்கண்,