தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Thinaimalai Nootri Iympathu


"செல்வக்கடம்ப மர்ந்தான் வேன் மின்னி,” எனக் கூறப்படுதலால், அந்நூலின்கண் காணப்படும் திணைமுறைவைப்பே இந்நூலுக்கும் கொள்ளப்படவேண்டும் போற் கூறக் கிடக்கின்றது. ஞாயிற்றின் வெப்பத்தாற் கார்தோன்று மென்ற இயற்கையுணர்வு அக்காலத்து முண்டென்பது நூற்றைந்தாவது செய்யுளான் வலியுறுகின்றது. இம்மையிற் செயதன இம்மையிலேயே பயன்றரு மென்ற செய்தி நூற்றிருபத்து மூன்றாவது செய்யுளால் விளக்க முறுகின்றது. இடையிடையே முல்லை நிலத்தின்கண் தோன்றுங் கார்காலக் காட்சி ஓவியன் வரைந்த உருவெழிலோடு கற்பார் கண்ணகத்தே காணுமாறு இத்திணைக்கண் செப்பிச்செல்லு முறை சிந்தையிற் சேர்க்கற்பாலதாம்.

மருதத்தின்கண் அந்நிலவளனும், பாணற்கு வாயின் மறுக்கும் வழிகளும் பல்லாற்றான் விரிக்கப்பட்டுள்ளன. இடையிடையே உள்ளுறை யுவமமும், இறைச்சிப் பொருளும் புகுந்து கற்பார்க்கு நல்விருந்தாக நடக்கின்றன. தலைமகள் பூப்புற்றமையினைச் செவ்வணியுற்ற சேடியர் சென்று தலைவற்குத் தெரிவிக்கும் மரபும். பெற்ற மகற்கு ஐம்படை பூட்டி, பெயரிட்டு, முகங்கண்டு தலைவன் மகிழுஞ் செய்திகளும் இங்குத் தெளிவுறுகின்றன.

இந்நூலின்கண் நூற்று ஐம்பத்துமூன்று நேரிசை வெண்பாக்களும். இன்னிசை வெண்பா ஒன்றும் காணப்படுகின்றன. அவை மற்றைய சங்க நூற்களிற் கையாளப்பட்ட பாக்கள் போன்றே சுருங்கச் சொல்லிப் பெரும்பொருள் பலவற்றை விரிக்கும் பெற்றியனவாகக் காணப்படுகின்றன. மருதத்திணையின்கண் மூன்று செய்யுட்களில் ஏட்டுப் பிரதிகளி லேற்பட்ட சிதைவால் சில மொழிகள் காணக் கிடையாமற்போயின. அவற்றை முன் பின் வரு மொழகளின் துணைகொண்டு நிரப்புதல் செய்து. பெரிய எழுத்துக்களான் அவை காட்டப்பட்டுள்ளன.
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 05:08:53(இந்திய நேரம்)