Primary tabs
இதனை இயற்றிய கணிமேதாவியார் என்பார்க்கு, 'கணிந்தார்,' என மற்றொரு பெயரு முண்டென இறுதியிற் காணப்படும் பாயிரச் செய்யுளாற் பெறப்படும். நான்காவது செய்யுளின்கண், "கோடாப் புகழ்மாறன் கூடல்,” என இவர் கூறலான் மதுரையின் கண் பாண்டியனை யண்மி வாழந்த பலபுலவர்களிலொருவ ரெனப் பகரலாம் போலும். இன்னும் முல்லைத் திணை முதற்செய்யுளின்கண், "இருங்கடன்மா கொன்றான்,” என முருகப் பெருமானைக் கூறியுள்ளமையாலும், தொல்காப்பியர் போக்கின்படி முல்லையை முதற்கொண்டு நூலை அவர் தொடங்கியிருப்பர் எனக் கருத நேருகின்றமையாலும், இவர் சமயம் சைவமாமெனத் தோன்றுகின்றது. இவற்றுக்குமேல் இவரைப்பற்றி யறிதற்குச் சான்று யாதுங் கிடைத்திலது.
இந்நூல் மிக அருமையான பழைய பொழிப்புரை யொன்றினையும், பாட்டின் கருத்தினை விளக்கும் சிறு சொற்றொடர்களையும் கொண்டுள்ளது. இவற்றைக் கண்டார் யாரெனக் காணுமாறுங் கிட்டிலது. நாற்பத்து மூன்றாவது செய்யுளின் பழைய வுரையின் இறுதித் தொடரும், நூற்றிருபத்தேழாவது செய்யுளின் பழையவுரைப் பிற்பகுதியும் ஏடுகளின் சிதைவாற் காணப்பெறாது புதியனவாகச் சேர்க்கப்பட்டன. நூற்றிருபத்தெட்டாவது செய்யுண் முதல் இருபத்தேழு செய்யுட்கட்குப் பழையவுரையுங் கிடைக்கப் பெறவில்லை. இவற்றுக்குப் புதிதாகப் பதவுரைமட்டும் எழுதிச் சேர்க்கப்பட்டன. இப்புதியவுரைக்கண் அரிய பல திருத்தங்கள் செய்து உதவிய சாத்தூர் வழக்கறிஞர் திருவாளர் T. S. கந்தசாமி முதலியாரவர்கள் B. A. காலத்தினாற் செய்த நன்றி என்றும் எண்ணிப்பாராட்டும் ஏற்றமுடையதாகும்.
சென்னை
அரசாங்கக் கையெழுத்துப் புத்தகசாலையில் உள்ள திணைமாலை
நூற்றைம்பது என்ற இந்நூலின் கையெழுத்துப் பிரதிகொண்டு
நூற்று ஐம்பத்திரண்டாவது செய்யுட்கு, 'முலை', என்ற
பாட பேதமும், 'தழு',