Primary tabs
றும் திருத்தக்க தேவர் கூறியதனானும், உலகம் மூன்று என்பதை அறிக.
‘உலகம் மூன்றும் ஒருங்குணர்’ என்றது, மூவுலகத்துள்ள ஜீவன்முதலிய பொருள்களின் முக்காலத்தும் நிகழும் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒரே சமயத்தில் ஒருங்கே அறியும் ஞானத்தினை.1 ‘உலகுணர் கடவுள்‘ (சீவக. 2713)
என்றார் திருத்தக்க தேவரும்.
கேவலம் - கைவல்யநிலை 2; வினைகளினால் மறைந்திருந்த இயற்கையான ஞானமும் காட்சியும் வினைநீங்கியதனால் விளங்கப்பெற்ற உயிரின் நிலை; அது, குணத்தாலடைந்த கைவல்யநிலை, குணத்தாலும் திரவியத்தாலும் அடைந்த கைவல்யநிலை, என இருவகைப்படும். இதனை யசோ. 53-உரையில் காண்க.
காதிவினை அகாதிவினை என இருவினைகள் ஆன்மா விடம்சேர்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் தொகைவகையால் நான்கும், விரிவகையால் பலவுமாம். அவற்றுள் 1.
(நீல 450, 451.) எனவும் கூறுவன காண்க.