Primary tabs
முழவுபோல்வதை, ‘களிவாய்க் குயிலகள் முழவாக‘* என்னுஞ் சிந்தாமணிச்செய்யுளா லறிக. ‘வண்டுகாண் மகிழ் தேனினங்காள்‘* என்ற சிந்தாமணியால், வண்டும் தேனும் வெவ்வேறினத்தனவாதலை யறியலாகும். கூம்-கூவும் என்பது செய்யுமெனெச்சத்து இடையுயிர்மெய் கெட்டது. (7)
இதுவுமது
(இ-ள்.) மலர்ந்த பூ-மலர்ந்த பூக்களை, சிகை-உச்சியிலேயுடைய, வார் கொடி மங்கையர் - நீண்ட பூங்கொடிகளாகிய நாடகமகளிர், தலந்தலந்தொறும்-(வயந்த மன்னவன் வரும்) எல்லாவிடங்களிலும், ஆடினர் தாழ்ந்தனர் - நாட்டியமாடி வணங்கினர்; மாவினம் எலாம்-மாமரங்களெல்லாம், கலந்த காதன்மை-காதலரைக்கூடிய தமது காதலை, காட்டுநர்போல - வெளியிடுவார்போன்று, வண்தளிர் வலந்த-வளமார்ந்த தளிர்கள் செறிந்தனவாயின. (எ-று,)
வயந்த மன்னவன் வருமிடங்களிற் பூங்கொடிகளாகிய மாதர் ஆடினர்; மாவினங்களாகிய மங்கையர் தம் காதலை வெளிப்படுத்தினர் என்க.
கொடிகள், மல்லிகை மாலதி முதலயின. ‘கலந்த காதன்மை காட்டுநர் போல’ என்றது, மகளிர் தம் காதலரைச் சேர்ந் தின்புற்ற நலத்தால் தம் உடலில் தோன்றியமாமை நிறத்தை வெளிப்படுத்துவார் போல வென்பதாம்.
“கோமான் சென் றணைதலுமே கொங்கணிந்த மலர்தூவித் தேமாநின்றெதிர் கொள்ளச் சிறுகுயில் போற்றிசைத்தனவே வாமான்றேர் மன்னற்கு மங்கலஞ்சொல் மகளிரைப்போல் தூமாண்ட விளங்கொடிதந் தளிர்க்கையாற் றொழுதனவே’
* சீவக. 2691.
* சீவக, 892
1 யலர்ந்த.