Primary tabs
என்னும் (சூளா இரத.51,ம்) செய்யுள் ஈண்டு அறியத்தக்கது.
ஆடினர், முற்றெச்சம். ‘மாவினமே‘ என்றதில் ஏ, அசை. (8)
அரசனும் நகரமாந்தரும் வசந்தவிழா அயர முற்படுதல்
(இ-ள்.) வயந்தமன்னவன்-வசந்தகாலமாகிய வேந்தன், உயர்ந்த சோலைகளோடு- வானளாவிய சோலைகளிடத்து, எதிர்கொண்டிட - (அச்சோலைகளின் மரங்கள் முதலியன) எதிர்கொண்டு வரவேற்க, வந்தனன்-வந்துள்ளான், என்றலும்-என்று (வனபாலகன்) அரசனுக்குக் கூறலும், நயந்த மன்னனும்-(வசந்தகாலத்தை) விரும்பிய மாரிதத்தனென்னும் அரசனும், நல்நகர் மாந்தரும்-அவ்விராஜமாபுரத்துமக்களும், வயந்தம்-வேனில் விளையாட்டை, ஆடு வகையினராயினர்-மேற்கொள்ளும் முயற்சியுடையராயினர். (எ-று.)
வேனில் வரவை யறிந்த மன்னனும் மக்களும் வசந்த விழாக் கொண்டாட முற்பட்டன ரென்க.
‘உயர்ந்த சோலைகள் எதிர் கொண்டிட வயந்தமன்னவன் (அவற்றின்)
ஊடு வந்தனன்’ என இயைத்தலுமாம். இனி, ‘வசந்தமாடு உவகையினர் ஆயினர’ என்றும் பிரித்துப்
பொருள்
கூறலாம். (9)
(இ-ள்.) (அரசனும் நகரமாந்தரும்), கானும்-வனமும், வாவியும்-நீர் நிலையும், காவும்-சோலையும், அடுத்து-