Primary tabs
தங்கரர் முதலானோர் நின்று தவம்புரிந்த இடங்களைத் தரிசித்து வணங்குவது; அவ் விடங்களில் அவர்களின் ஞாபகார்த்தமாகப் பாதம் முதலியவற்றைப் பொறித்து வைப்பர்; அவற்றை வணங்கி வழிப்படுவது வழக்கம். அ+இடை-ஆயிடை; ‘சுட்டு நீளின் யகரமுந் தோன்.றுதல் நெறியே’ என்றதனால், சுட்டு நீண்டு யகரவுடம்படுமெய் வந்தது. ஐஞ்ஞூற்றுவர், போலி, ஓடு, மூன்றாம்வேற்றுமை உடனிகழ்ச்சி. (19)
சங்கத்தார் உபவாச தவம் கைக்கொள்ளுதல்
(இ-ள்.) அண்ணல் - தலைவராகிய சுதத்தாசார்யர், வந்து-(சங்கமுடன்) வந்து, மாநகர்-சிறந்த இராஜமாபுரத்தின், புறத்து - வெளியேயுள்ள, ஓர்வளமலர்பொழிலுள் - வளவிய மலர்நிறைந்த ஒப்பற்ற சோலையினுள், விட்டு-தங்கி, முந்து நாம் உரைத்த சுற்றம் முழுவதினோடும்-மேலே நாம்கூறிய அருந்தவர் உபாசகர் என்ற தம்மைச் சூழ்ந்துள்ளயாவருடனும், நெறிக்கண்தீமை-(நடந்துவந்த) வழியில் (தம்மையறியாது) நிகழ்ந்த தீமைகளை, தீ£த்திடும் நியமம் - நீக்குவதற்குக் - காரணமான நியமவிரதத்தினை (ஏற்று), சிந்தையால் முற்றி-(குறித்த காலம் வரை) தியானத்திலிருந்து முடித்துப்(பின்பு), அந்தில் - அவ்விடத்தே, ஆசனம் கொண்டு - தமக்கு உரிய ஆசனத்தில் வீற்றிருந்து,அனசனத்தவம் அமர்ந்தான் - உபவாச தவத்தை (யாவருடனும்) மேற்கொண்டார்.(எ-று.)
சுதத்த ஆசாரியர், சோலையில் தங்கிச் சுற்றம் முழுவதினோடும் நியமமுற்றி, உபவாசத்தையும் மேற்கொண்டாரென்க.
அண்ணல், சுற்றம் முழுவதினோடும் வந்து முற்றி அமர்ந்தான் என இயைக்க. விடுதல் - தங்குதல் ‘ பொன்னெயில்