தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium


- 31 -

புறத்துவிட்டார் ‘ என்றார் (சீவக. 3051.)   சிந்தாமணி ஆசிரியரும்.  சிந்தை-தியானம்.  நெறிக்கண் தீமை - நெறிக்கண் ஏற்படுந் தீமை.  இது ஈர்யாபதாஸ்ரவம் எனப்படு்ம்.

 
“குறுந ரிட்ட குவளையம் போதொடு
 
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
 
நெறிசெல் வருத்தத்து நீரஞ ரெய்தி
 
அறியா தடியாங் கிடுதலுங் கூடும்"

என(சிலப். நாடுகாண் காதையில்) வருவது காண்க. நியமம் முற்றுதலாவது-தியானம் விரதம் முதலியவற்றைத்தான் குறித்த எல்லைவரையில் ஏற்று நிறைவேற்றுவது. விரதங்கள்; இயமம், நியமம் என இரு வகைப்படும், அவற்றுள், இயமம் காலவரையறையின்றி ஆயுளளவும் ஏற்று அனுஷ்டிப்பதாகும்.  நியமம், குறித்த காலம் வரையிற், பொருந்தி யிருத்தல்.  “இயமங்கள் காலவரையறை யில்லை, நியமங்களல்லா வதம்.” (அருங்.  102.) என்பதறிக. முனிவர்கள், ‘ உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை, அற்றே தவத்திற் குரு‘ (குறள்.261) என்று தேவர் கூறியதற் கேற்ப ஒழுகுபவராயினும், அசதி மறதியினால் உயி்ர்க்கு உறுகண் நேர்ந்திருக்குமாயின் அதைப் போக்க நியமவிரதம் கொண்டு யோகத்திலிருப்பது மரபு. “அகம்பனர்...யோகுகொண்டு தன்னளவிறந்த பின்னர்” என (யசோ. 224.) இவ்வாசிரியரே கூறுதல் காண்க. ஆசனம்-பத்மாசனம் முதலியன.  அசனம்-உணவு, அன-சனம்-உணவு உட்கொள்ளாமை.  அனசனத்தவம், பன்னிருவகைத் தவங்களில் ஒன்று; தவம், உடல்சம்பந்தமாகிய(பாஹ்ய)தவம் எனவும், உயிர் சம்பந்தமாகிய (ஆப்யந்தர) தவம் எனவும் இருவகைப்படும்.  அவை ஒவ்வொன்றும் ஆறு பிரிவினை யுடையது.  பாஹ்யதவத்தின் பிரிவும் அவற்றின் விவரங்களும் வருமாறு.  1. அனசனம்;-வினைகளும் வேட்கையும் விலகுவதற்கும், பொறிகளும் மனமும் வசப்படுவதற்கும், கொல்லாமையும் தியானமும் மிகுவதற்கும் காரணமாக நால்வகை உணவையும்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:49:19(இந்திய நேரம்)