Primary tabs
துறப்பது 2. ஆவமோதர்யம்;-உணவுமிஞ்சினால் ஐம்பொறிமிகும், உணவு இன்றேல் உடல் நெகிழும். ஆதலின், சிறிது சிறிதாக உணவு சுருக்கப்பழகுதல். 3. விருத்திபரிசங்க்யாணம்;-முனிவர், உணவு ஏற்கச் செல்லும்போது அவ்வுணவின்மேல் ஏற்படும் பற்று ஒழிவதற்காக, ‘இன்றைக்கு இத்துணைத் தெருவிற்கு மேலும் இத்துணை வீட்டிற்கு மேலும் செல்வதில்லை‘ என்றும், ‘இன்று இத்துணை வஸ்த்துக்களுக்கு மேல் புசிப்பதில்லை’ என்றும், ‘இத்துணைநாழிகைக்கு மேல் உணவு கிடைத்தால் உண்ணுவதில்லை‘ என்றும், விதிக்கப்பட்ட நெறியினை அனுஷ்டித்தலாகிய நியமவிரதம் ஏற்றுச் செல்லுதல். 4. இரசபரித்யாகம்;- சுவைக்கண்மேவல் துன்ப காரணமென்று அறத்துறந்து மனம் ஒத்து இரசவஸ்த்துகளைப் புசியாது துறத்தல். 5. விவிக்திசய்யாசனம்;-தியானத்திற் செல்லவொட்டாது தடுத்துக் காதலை விளைவிக்கும் மகளிர் முதலியோரில்லா விடத்துத் தனித்து வசித்தல். 6. காயக்லேசம்;-பனி, கோடை, மாரி ஆகிய மூன்று காலங்களிலும் நிகழவேண்டிய முறைப்படி தவஞ்செய்து உடலைச் சுருங்கச் செய்தல்.
இனி, ஆப்யந்தர தவத்தின் பிரிவும், அவற்றின் விவரவங்களும். 1. பிராயச்சித்தம்;-(கழுவாய்)தம்மையறியாது நிகழ்ந்த குற்றங்களைப் பரிகரித்தல். 2. விநயம்;- நற்காட்சி முதலிய மும்மணிகளிடத்திலும், அவற்றையுடையாரிடத்திலும் வணக்கமாயிருத்தல், 3. வையாப்ருத்யம்;-இல்லறத்தார், துறவிகள் முதலானவர்களுக்கு நேர்ந்த நோய் முதலியவற்றைப் பரிகரித்தல். 4. ஸ்வாத்யாயம்;-வினைகள் விலகுவதற்குக் காரணமான நூல்களில் பழகுவதும், உபதேசிப்பதும். 5. வியுத்ஸர்க்கம்;- அகப்பற்று, புறப்பற்றுக்களை விடுதல். 6. தியானம்;- தீய எண்ணங்கள் தன்கண் நிகழாதவாறு தடுத்துத் தூயஎண்ணங்களில் பழகுதல். இப் பன்னிருவகைத் தவங்களையும் நிகழ்த்துந் தூய முனிவர்களையே மேலைச் செய்யுளில் (யசோ,23.) அருந்தவர்கள் என்றார். அந்தில்-அசையெனினுமாம். மாது, ஒ-அசைகள். (20)