Primary tabs
தங்கை நெஞ்சில் நனி அஞ்சுதல் அஞ்சி - தங்கை மனத்தில்பெரிதும் அஞ்சுவாள் என்று தான் பயந்து, தன் கையால் - தன்கையினால், அவள் முன்கைபற்றிக்கொண்டு - சகோதரியின் முன்னங்கையைப் பிடித்து (நடத்தி)க்கொண்டு, செல்வான்-செல்வானாயினான். (எ-று).
முழுமதியும் மின்னலும் பரிவேடத்தினுட் சென்றாலொப்ப, அபயருசியும் அபயமதியும் மறவர் சூழச் சென்றனரென்க.
வன்சொல் கூறும் பழக்கமுள்ளவராதலின், ‘வன்சொல்வாய் மறவர் ‘என்றார். மறவர் - பாபச்செயல் புரிபவர்; மறம்-பாபம். மதியம்-முழுமதி. அபயருசிக்குமுழுமதியையும், அபயமதிக்கு மின்னலையும், மறவர்க்குப் பரிவேடத்தையும், உவமித்தார். அறவர் சூழ்ந்து சென்றதனால், மதியைச்சூழ்ந்த பரிவேடம் உவமையாயிற்று. மின்னலுடன்செல்லும் முழுமதி,
இல்பொருளுவமை. இவ்வாறு கூறும்வழக்கினை, ‘நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர்கோளொடு குளிர்மதி வந்து‘ (சீவக.320) என்றதனாலும் அறியலாகும். பரிவேடம் - மண்டலம் எனப்படும். ஐயன் - அண்ணன். “வாழ்வர் நின்னையர்” * என்றார் பெரியாரும். கலைநிறைந்தவனுக்கு முழுமதியை உவமை கூறுவதனை, சீவக.454-இல் காணலாகும். தமக்கு வருந் துன்பத்திற்கு அஞ்சாது, பிறர்துன்பங்கண்டே அஞ்சுதல் பெரியோர்க்கியல்பு ஆதலின், சிறந்த அபயருசி அங்ஙனம் அஞ்சினானென்பார், ‘ தங்கை அஞ்சுதல் அஞ்சி‘ என்றார். இனி, ‘தங்கை அஞ்சுதல்‘ என்பதற்குத் தங்கை அஞ்சுகின்றதனைக் கண்டு எனப் பொருள் உரைக்கின், ‘வாழ்க்கை விடுவதற்கு அஞ்சலுண்டோ‘, ‘நல்லறத்திற் காட்சி கண்ணிய மனத்தரிம்மைக் காதலுமுடையரோ,‘ ‘நடுக்கமு மடுத்ததில்லை‘என்று (யசோ. 46,7,8-.ல்) அபயமதி, தானே கூறுகின்றதனால், பொருந்தாமை யுணர்க. தான், அசை (27)
* சிலப். கானல் 17.