தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 45 -

32. 
நங்கை யஞ்சல் நெஞ்சி னமக்கிவ ணழிவொன் றில்லை
 
யிங்குநம் முடம்பிற் கேதமெய்துவ திவரி னெய்தின்
 
அங்கதற் கழுங்க லென்னை யதுநம தன்றென் றன்றோ
 
மங்கையா மதனை முன்னே மனத்தினில்விடுத்ததென்றான்

(இ-ள்.) நங்கை - நங்காய், நீ--, நெஞ்சில் - நின்மனத்தில், அஞ்சல் - அஞ்சாதே; இவண் - இவ்விடத்து, நமக்கு - (ஆன்மாவாகிய) நமக்கு, அழிவு -,- ஒன்று(ம்) இல்லை-சிறிதும் இல்லை; இங்கு-இவ்விடத்து, நம் உடம்பிற்கு-நம் உடலிற்கே, ஏதம் எய்துவது - கேடு அடைவதாகும்.  இவரின் எய்தின் - இவர்களால் கேடு எய்துமாயின், அதற்கு ---, அழுங்கல் - வருந்துதல், என்னை -- ?’  மங்கை - மங்கையே, அது-அவ்வுடல், நமது அன்று என்று அன்றோ - நம் ஆன்மஸ்வரூபமன்று என்றல்லவோ, முன்னே - துறவு பூண்டஅன்றே, அதனை-அவ்வுடம்பின் பற்றினை, மனத்தினில் விடுத்தது - மனத்தாலும்விட்டொழித்தது, என்றான்-என்று (அபயருசி) கூறினான். (எ-று.)

உடலுக்கேயன்றி உயிருக்கழிவில்லை யெனத்தெளிவிக்கின்றனனென்க.

நங்கை-பெண்களிற் சிறந்தவள்.  நமக்கு - உடலிற்குள்இயங்கும் அறிவுமயமான வுயி்ர்க்கு.  பொன், மோதிரம் முதலிய பல உருவமாக மாறினும்,  அப்பொன்னும் அதன் குணங்களும் அழியாது நிற்பது போல, உயிர், மனிதர் விலங்கு முதலிய பலபிறவிகளில் மாறிப்பிறந்த போதிலும் அவ்வுயிரும் அதன் இயற்கைக்குணங் களாகிய அறிவு காட்சி முதலியனவும் அழியாவியல்புடையன; ஆதலின், நமக்கிவண் அழிவொன்றில்லை, ‘இங்கு நம்முடம் பிற்கேதம்‘ என்றான்.  ‘கேடின்றி நிற்பதுயிர், காண்மினுடம்பு கவினிளமை, வல்லாண்மை செல்வமென் றிவ்வெல்லாம் வானத்து, வில்லாகும்‘ என்றார்

(திருக்கலம்.72.) உதீசி தேவரும், உயிருக்கு அழிவு இல்லை யென்பதனை உறுதிப்படுத்த வேண்டியே, ‘இங்குநம்முடம்பிற்கேதம்‘ எனப் பிரித்துக்கூறினார்.  ‘தானாகவே அழியுந்தன்மையுள்ள இவ்வுடல்
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:51:38(இந்திய நேரம்)