Primary tabs
எனவும் (மேரு.822, 823-ல்) கூறியதனா லறிக. இனி, எண்ணிறந்தனங்கமெல்லாம் என்னும் பாடத்திற்கு - அளவிறந்த ஆகாசமெல்லாம் என்று பொருள் கொள்க. (32)
(இதுமுதல் நான்கு கவிகளால் நான்கு கதிகளிலும்
உயிர்களடையும் வரலாற்றைக் கூறுவார்)
நரககதி வரலாறு
(இ-ள்.) உழை விழி-பெண்மான்போலும் பார்வையினையுடைய தங்கையே, அழலினுள் மூழ்கி அன்ன-(உயிருடன்) அனலில் விழுந்தாற்போன்ற, அரு நவை நரகந்தம்முள்-பொறுத்தற்கரிய துன்பந்தரும் நரகங்களுள், முழம் ஒருமூன்றில் தொட்டு-(முதல்நரகத்திலுள்ளார் உடம்பின் அளவான) மூன்றுமுழம் தொடங்கி, எழு முறை பெருகி-ஏழுநரகத்தும் முறையாகப் பெருகி, மேன்மேல் எய்திய-ஒன்றை ஒன்று இரட்டித்த அளவாகச் சென்று (ஏழாம் நரகத்து) அடைந்த, ஐந்நூறு மூரிவெஞ்சிலைகள் - ஐந்நூறு வில்லின் உயரம் வரையிலும் ஆகிய, உருவம் எல்லாம் - நரகயாக்கையாவும், நம்மோடு ஒன்றி ஒருவின-நம் உயிருடன் பொருந்தியிருந்து நீங்கியன; (அப்பிறவிகளை), உணரல் ஆமோ-இத்துணைய வென்று உணரமுடியுமோ?(முடியாது). (எ-று.)
மூன்று முழவுயரத்திலிருந்து ஐந்நூறு வில்வரையிலுமுள்ள நரகர்யாக்கையில், நாம் பிறந்து நீங்கினது அளவில்லாத னவென்றானென்க.