தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Yasodara Kavium


- 51 -

பிறந்த நமது ஒவ்வொரு பிறவியிலும், பெறும் உடம்பு அவைகள்-பெற்ற வுடம்புகளை, பேணாத் துறந்து - பற்று வையாது துறந்து, அறம் புணரின்-அறநெறியை மேற்கொண்டடிருந்தோ மாயின்,  தொடர்ந்தன அல்ல-(நம்மை அப்பிறவிகள்) தொடர்ந்திரா; இது சிறந்தது என்று எண்ணி-இவ்வுடம்பு முதலியவற்றின் சுகமே மேலானதெனக் கருதி,  செம்மையே செய்ய-அதற்கேற்ற சிறந்த செயலைச்செய்ததனால், இறந்த காலத்து-கடந்தகாலத்தில், எண்ணிறந்தனகள் எல்லாம்-எண்ணிறந்த பிறவிகளெல்லாம், தாமே-தாமாகவே, இறந்தன-கழிந்தன. (எ-று.)

‘ஐம்பொறிகளால் நுகரப்படும் இந்திரியசுகமே மேலானது; இதைவிட வேறுஇன்ப மில்லை’ என்று நினைத்து, அப் பிறவிக்கு வேண்டிய நன்மையையே செய்து உழன்றதனால் எண்ணிறந்த பிறவிகள் கழிந்தன என்றானென்க.

‘பிறந்த நம் பிறவி’ என்று இறந்தகாலத்தாற் கூறினமையின், ‘பெறும் உடம்பு’ பெற்ற வுடம்பாயிற்று. பேணா-பேணாமல்; இரட்சியாமல், துறந்து-புறப்பற்று அகப்பற்று இரண்டையுந் துறந்து. அறம்-திருவறம். புணர்தல்-பொருந்தி நிகழ்தல்.  தோகை, ஆகுபெயர். சிறந்ததை, ஐ-சாரியை.  செம்மை-நன்மையானவை.  ‘தாமே’ என்பதில் ஏகாரம் தேற்றம். ஒன்றுமுதல் ஐம்பொறி வரையிலும் உள்ள பிறவிகளைத் தொகுத்து, ‘இறந்தனவிறந்தகாலத் தெண்ணிறந்தனக ளெல்லாம்’ என்றான். அப்பிறவிகளின் விவரம் முன்னர் நான்கு கவிகளில் கூறுகின்றார். நான்கு பொறி வரையிலும் அடைந்த உயிர்கள் அறம் கைக்கொள்ளுஞ் சக்தி யிலவாதலின் ‘பிறவி‘ என்பதற்கு (அறம் புணரும் பிறவியாகிய) ஐம்பொறி யடைந்துள்ள பிறப்பு என்றுரைக்கப்பட்டது. ஒன்று  முதல் ஐம்பொறியுயிர்களை, ‘ஒன்று நீர்மர நிலநெருப்புக்காற், றென்றிக் காயமைந் தெய்தி வாழுமே‘ எனவும்,

 
‘நந்து சிப்பிசங் காதி நாவன
 
குந்தெ றும்புகோ பாதி மூன்றன‘


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:52:36(இந்திய நேரம்)