தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Yasodara Kavium

 


- 50 -

பெற்ற பெற்ற அடுக்குத் தொடர்.  நாம் பிறந்தபல பிறவிகளிலும் பொறி வாயிலாக வேற்படும் இன்பதுன்பங்களுக்கு நாம் வி்ருப்பு வெறுப்புகள் அடைகின்றோம்; அவற்றானே வினைகள் மீட்டும் நம்மிடம் தொடர்கின்றன; அவ் வினைத்தொடர்பால் பிறவியாகின்றது;  இதனை , ‘எய்துவதெய்திப் பின்னும் பிறந்திடஇறந்தது‘ என்றார்.

 
“பிறந்தவன் பொறிபுலக் கிவரு மப்புலஞ
 
சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும்
 
அறைந்தவை வாயிலா வினைக ளீட்டினான்
 
இறந்தவன் பின்னுமவ் வியற்கை யெய்துமே.”

என்று (சூளா. முத்தி.2.) கூறுவது மறிக.  இப்பொழுதுள்ள பிறவியிலும் அச்சம் முதலியன அடைவோமாயின், அவ்வினைகளே வந்து தொடரும் என்பான், ‘இதுவும் அவ்வியல் பிற்றே‘ என்றான்.  நான்கு கதிகள் கூறப்பட்டதனால், வினை என்றது, ஈண்டு நல்வினை தீவினை யென்ற இரண்டையுமென்க.  ‘எண்ணிறந்த வூழிகளெல்லா முலவாத் தடுமாற்றத், தாழிக ளைந்தி னனந்தமுறை--சூழுங், கறங்கி னுழலுங் கதிதோறுந் துன்பம், பிறங்கும் பிறப்பஞ்சி வாழ்மின்‘ (திருக்கலம்,. 72). என்றது ஈண்டு நோக்கற்பாலது.  ‘இதுவும்‘ என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவியது.  ‘இயல்பிற்றே‘ என்பதில் ஏகாரம் தேற்றம்.                                            (31)

36. 
பிறந்தநம் பிறவிதோறும் பெறுமுடம் பவைகள் பேணாத்
 
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல தோகாய்
 
சிறந்ததை யிதுவென் றெண்ணிச் செம்மையே செய்யத் தாமே
 
இறந்தன விறந்த1 காலத் தெண்ணிறந்தன2 களெல்லாம்.

(இ-ள்.) தோகாய்-மயில் போலுஞ் சாயலையுடைய தங்கையே, பிறந்த தம் பிறவி தோறும்-(பொறிகள் ஐந்தடைந்து)

 

1

பாடம் மிறந்த.
2
தனங்கமெல்லாம், தனர்க ளெல்லாம், தனைக ளெல்லாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 05-09-2016 10:52:27(இந்திய நேரம்)